Monday, February 8, 2010
நாட்குறிப்பு 2009
என்னுடைய இந்த நாட்குறிப்பில் என் சம்பந்தப்பட்ட பொதுவான தகவல்களை மட்டுமே, இது வரை எழுதி வந்தேன். ஆனால் இந்த பதிவிலே எம் குடும்ப செய்தியையும் கண்டிப்பாக பதிவு செய்து நினைவிலே நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் நான். சுமார் 4 வருடங்களுக்கு முன்பாக, எம் ஆத்தூர் சகோதரியும், மாமாவும் குடும்பத்தினர் ஒன்று சேரும் விதமாக குடும்ப விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து சகோதர சகோதரிகளின் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்திருந்தனர். அது சமயம் நாங்கள் பெண்கள் தங்கும் விடுதியை நடத்திக் கொண்டிருந்ததால், நானும் என் மனைவியும் தவிர எம் மகள்களும், என் மற்றொரு சகோதரியின் மகன் சுபஹர் மற்றும் எங்கள் வீட்டில் தங்கி கல்லூரி கல்வி பயின்று வந்த எம் பெரிய மச்சினன் மகள் யாமினியும் விழாவில் கலந்து கொண்டு திரும்பினார்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பாகவே எங்களுக்கு அதிர்ச்சிதரும் ஒரு தகவல் கிடைத்தது. அதாவது எங்கள் பெரிய மகள், அவள் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, பணியாற்றிக் கொண்டிருந்த தன் அலுவலக சகா ஒருவரை காதலிப்பதாக!!. என் மனமோ பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்க, என் மகள் வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு, நேரடியாக பேசி முடிவு செய்யலாம் என நினைத்து நானோ அமைதியாக இருக்க, என் மனைவியோ மார்பிலும், வயிற்றிலும்,தலையிலும் மாறிமாறி கைகளால் அடித்துக் கொண்டு, கதறி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். எப்படி இந்த காதல் விஷயம் வெளியே தெரியவந்தது என்பது குறித்தும், உறவினர்களிடம் மகளின் காதல் விஷயத்தை தானாக வலிய கைப்பேசியில் பேசி தகவல் கூறி, அறிவுரைகளை பெற்றுக் கொண்டிருக்க, தன் தாயின் மனவோட்டத்தை அறிந்தவளாக எங்கள் மகளோ, வீட்டுக்கு திரும்பும் முன்பாகவே, யாரிடம் தெரிவித்தால் தன் தாயிக்கு தகவல் போய் சேருமோ, அவர்களிடம் சிறிது சிறிதாக தகவல்களை கசிய விட்டுவிட்டு, ஒன்றும் அறியாதவளைப் போல் வீட்டுக்கு அமைதியாக வந்து சேர்ந்தாள். பிறகு நடந்தது என்ன? அடுத்ததில்.....
Labels:
நாட்குறிப்புகள் -2009
Subscribe to:
Posts (Atom)

