Wednesday, November 11, 2009

நாட்குறிப்பு 2009 -13

அத்துடன் இந்த தீபாவளி திருநாள் இரவும் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தது. செப்டம்பர் மாதம் திருமணமான உறவினரின் மகனும், மருமகளும் தலை திபாவளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை, அதனால் எங்கள் வீட்டிற்கு, அவர்கள் அனைவரையும் அழைத்து மதிய விருந்து அளித்தோம். அதனால் மாலையில் விரைவாக பட்டாசுகளை வெடிக்க செல்லமுடியவில்லை. ஆகவே 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க மொட்டைமாடிக்கு ( மேல்தளத்துக்கு) சென்றோம். அப்போது இரண்டாம் தளத்தில் குடியிருந்து வரும் குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் மேல்தளத்திலிருந்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மேல்தளத்திற்கு சென்றோம். அங்கும் வீட்டு உரிமையாளரின் புதுமண தம்பதிகளான சிறிய மகளும் மருமகனும், பெரிய மகளும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.மாடிப்பகுதியோ விரிந்திருக்க, அவர்களை தாண்டி செல்லமுடியாததால், இடம் இருந்த முற்பகுதிலேயே, 89 வயதான எனது தந்தையை சேரில் அமர வைத்துவிட்டு நான் தரையில் அமர்ந்திருக்க,நாங்களும் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தோம். டபுள்சாட் எனப்படும் இரட்டை வெடியை, நிற்க வைத்து விடாமல் படுக்கை வசத்திலும், மற்ற சில வெடிகளை எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் எங்களுக்கு அருகிலேயே வைத்ததைக் கண்டு, சிறிது தள்ளி வெடிகளை வெடிக்க கேட்டுக் கொண்டும், அதை பொருட்படுத்தாதவர்களாய், எங்களுக்கு அருகிலேயே வெடித்தார்கள். எனது தந்தைக்கும், எனக்கும் மற்றும் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளுக்கு அருகிலேயே தீப்பொறிகள் வருவதை கூறி மீண்டும் அறிவுறுத்தியும், அவர்கள் செவிமடுக்காததை கண்ட நாங்கள், விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக எங்கள் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் குஜராத்தி வீட்டுகாரர்கள் பட்டாசு வெடிக்க மாடிக்கு அழைத்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் இடையிலேயே எங்களைப் போலவே பாதிக்கப்பட்டார்கள் என்பது. எங்களுக்கு சோர்வாக இருப்பதை கூறி, அவர்களுடன் கலந்துக் கொள்ளமுடியாமைக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டோம். நம் மகிழ்வுக்காக, மற்றவர்களின் சந்தோஷத்தை பறிக்கலாமா?. விழா என்பதே அனைவரும் மகிழ்வதற்குதானே!. எப்பொழுது இதை உணர்வார்களோ. வரிசையாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு மிக்கவருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததில் தொடரும் நவம்பர் மாத நினைவுகள்........

01/11/2009.

Tuesday, November 10, 2009

நாட்குறிப்பு 2009 -12

மேற்கு மாம்பழம் அரிமா சங்க விழாவை முடித்துக் கொண்டு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் பணியாற்றுகின்ற செல்வி அவர்களின் அழைப்பின்பேரில், அவர்களையும் அழைத்துக் கொண்டு "வாய்ஸ் ஆப் நந்தினி" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் அடையார் யூத் ஹாஸ்டல் விழா அரங்கத்தில் நடைப்பெற்ற "காந்தி ஜெயந்தி " விழாவுக்கு சென்று விட்டு, அங்கிருந்து அடையார் காது கேளாதோர் பள்ளிக்கு சென்று விட்டு, அப்படியே கோட்டூரில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முதல்முறையாக சென்றேன். அதன் தலைவர் திரு.சிதம்பரநாதன் அவர்கள், நான் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் இணைந்தபோதிலிருந்தே அறிமுகமானவர். அப்பொழுது அவர் மதுரை மாவட்ட சங்க தலைவராக செயல்பட்டு வந்தார். நான் அங்கு சென்றிருந்த சமயம் அவர், மதுரையில் அன்று "கலைவிழி" அமைப்பின் சார்பில் கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாற்றுதிறனாளிகளால் மட்டும் உருவாக்கப்படும் "மா" திரைப்பட துவக்க விழாவுக்கு சென்றிருந்தார். இந்த சங்கத்தின் மாநில செயலாளராக செயல் பட்டு வரும் திரு.சிம்மசந்திரன் அவர்களை சங்கத்தில் சந்தித்து சில மணித்துளிகள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டோம். சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "மாற்றுத்திறன் மக்களின் குரல்'' இதழை வழங்கியதுடன், இச்சங்கத்தின் அறக்கட்டளையும், அட்வென்ட் டிசைன்ஸ் நிறுவனமும் இனைந்து 10 ந் தேதி நடத்தவிருந்த ஊனமுற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் கொடுத்ததுடன், 4.5 ந் தேதிகளில் தென்னக இரயில்வேயால் நடக்கவிருந்த '' இரயில் பயணங்களில் ஊனமுற்றவர்கான குறைகள்'' குறித்த கருத்தறியும் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே போல் இந்த அக்டோபர் மாதம் 14,15 தேதிகளில் டெல்லியில் இந்திய இரயில்வேயால் நடைப்பெறவிருந்த அகில இந்திய ஊனமுற்றவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருந்த கூட்டத்திற்கும் அழைப்பு அச்சமயத்தில் விடுத்தார். ஆனால அதற்குரிய நடைமுறை தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக இல்லாததால், அவர்களுடன் இனைந்து செல்லமுடியவில்லை.கலந்துக்கொள்ள முடியாமல்போனது மனவருத்தத்தை அளித்த நிகழ்வுகள்.


அடுத்ததில்............


நாட்குறிப்பு 2009 - 11

இந்த மாதத்தில் ஒரு வருத்தமான விசயமும் நடந்தது. வாடகையில் மற்றம் செய்யக்கூடாது என, இரண்டு வருட ஒப்பந்தம் செய்து, நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் கூட முடியவில்லை, அதற்குள் வீட்டின் ஓனராக இருக்கின்ற பெண்மணி, வாடகையை 25 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் அல்லது வீட்டை காலிசெய்து விடுங்களென எச்சரிக்கை விடுத்தார். நானோ ஒப்பந்தத்தை நினையூட்ட, அவரோ பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே ஒப்பந்தத்தைப் பற்றி பேசவேண்டாம், விருப்பம் இல்லையேல் காலி செய்துவிடுங்கள் என கண்டிப்பாக கூற மீண்டும் வீட்டை தேடுவது தற்போதய சுழ்நிலையில் மிகவும் கடினமாக தோன்றியதால், அவரிடம் 500 ரூபாய் உயர்த்திதருவதாக மன்றாடி, பின் ஒருவழியாக 1000 ரூபாய் உயர்த்தி பெற்றுக் கொள்ள சம்மதித்து சென்றார். இது எங்களுக்கிருந்த பொருளாதார சுழ்நிலையில் மிக்க சிரமத்தை உணர்ந்தோம். ஆனால் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், கூடிய விரைவில் குத்தகைக்கோ (Lease), குறைந்த வாடகைக்கோ வீடு பார்த்து சென்று விடுவதென முடிவு செய்துக் கொண்டேன். ஏனென்றால் இந்த குடியிருப்பு கட்டடித்திலேயே நன்கு வீடுகளும், வேறொரு இடத்தில் பல குடியிருப்புகள் கொண்ட முழு உரிமையுடைய கட்டடமும் ( ) , வீட்டில் இரு மகள்களும் உயர் பணிகளில் இருக்க, இத்தனை பெருத்த வருமானம் இருந்த சூழ்நிலையிலும் விலை உயர்வை காரணம் காட்டி, ஒப்பந்தத்தையும் நிராகரித்து, அவர் என்னைமரியாதை குறைவாக பேசி டார்ச்சர் செய்தது, கணவனை இழந்த பெண்மணியான, அவர் மேல் இருந்த பெரும் மதிப்பு அந்த நொடியில் பாழ்பட்டுவிட்டது.


மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தை சேர்ந்த திரு. மாம்பழம் முருகன் அவர்களின் அழைப்பின் பேரில், 27/09/2009 அன்று மாலை சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மண்டலம் எண்: 9 ன் ஊருந்து ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுதபூசையை முன்னிட்டு நடைப்பெற்ற ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டேன்.ஆனால் விழா துவங்குவதற்கு முன்பாகவே பெருங்காற்றுடன் பெரும்மழையும் துவங்கி விட்டதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிகள் சீர்குலைந்தது, ஒரு வழியாக ஒரு கட்டடத்தின் போர்டிகோவில் உதவிகள் மட்டும் வழங்கப்பட்டது. சென்னை மாநகர மேயர்.திரு.சுப்பிரமணியம் அவர்களும், மாநகர கமிஷ்னர் திரு.லக்கானி அவர்களும் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்களும் தனித்தனியாக வந்து உதவிகளை வழங்கி மரியாதை பெற்று சென்றார்கள். மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு கிடைத்தும் மழையினால் பறிபோனது. அதற்கான வாய்ப்பு விரைவிலேயே மீண்டும் கிடைத்தது. எதில்? அது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில்...

திரு.மாம்பழம் முருகன் அவர்கள் என்னுடைய மேடைப் பேச்சுக்கான ஏக்கத்தை புரிந்துக் கொண்டு, மேற்கு மாம்பழத்தில், மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ந் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 141 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு உதவிகள் வழங்கும் விழாவில் பேச வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒன்று மேடைப்பேச்சு போல் அல்லாமல், ஏதோ பாடம் பார்த்து படிப்பது போல என்னுடைய பேச்சு இருந்தது என்பதையும், மேலும் மேடைப்பேச்சுக்கு தகுந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறிந்துக் கொண்டேன். அந்த உரையை http://aambalmalar.blogspot.com/ வலைப்பதிவில் ஐந்து பகுதிகளாக பதிவு செய்துள்ளேன்.அடுத்ததில்....

நாட்குறிப்பு 2009 -10

சென்ற வருடம் சாலை விபத்தில் முளைசாவினால் மரணமடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள், அவனின் பெற்றோர்களான டாக்டர் தம்பதிகளால் உடலுறுப்புதானம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைப்பெற்று ஒரு வருடம் ஆவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவரும், திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து சுயத்தொழில் செய்து வருகின்ற திரு. ஜெகதீசன், தன் கால் ஊனமுற்றுள்ள நிலையிலும் உடலுருப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால், அவரின் சங்க உறுப்பினர்கள் இருவருடன் பல மாவட்டங்களின் வழியாக, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபடி 15 நாட்களில் சைக்களிலேயே பயணம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும், உடல் உறுப்புதான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் நடைப்பெற்ற விழாவிற்கு, இச்சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினருமான திரு.தங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டேன்.

இது எதற்காக நடைபெறுகின்ற விழா என அறியாமலே கலந்துக்கொண்டேன். எனென்றால் விழா நடைப்பெறுவதற்கு முதல் நாளன்று இரவு எனக்கு போன் செய்து, சென்னை தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோடிலுள்ள பள்ளி வளாக அரங்கத்தில் விழா நடைப்பெறுகிறது, தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள் என திரு. தங்கம் அவர்களின் அழைப்பையேற்று, அங்கு சென்ற பிறகுதான் விழா குறித்த விபரமே தெரிந்தது, இதை குறித்து பேசுவதற்கு ஏற்றவகையில் நானும் குறிப்புகள் எடுத்து வந்திருப்பேன் அல்லவா என நண்பர் என்ற முறையில் கேட்டேன். அதற்கு அவரோ திடிரென்று தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்களின் அறிவுரைப் பேரில் மூன்று நாட்களில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என சமாதானம் கூறினார். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்கள் தலைமையில் சமுக சேவையில் ஈடுபாடு உடையவரும் திரைப்பட நடிகருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், எக்ஸ்னோரா இண்டேர்நேசனல் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.நிர்மல், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலசங்க செயலாளர் திரு.சிம்மசந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொள்ள விழா நடைப்பெற்று முடிந்தது.

என்னுடைய கருத்துகளையும் பதிவு செய்யும் விதமாக நானே வலிய வாய்ப்பைக்கேட்டு, எனது தாய், சகோதரி ஆகிய இருவரும் கண்தானம் செய்துள்ளதையும், இரத்தம்,கண்,உடல் உறுப்பு தானம் பற்றிய அவசியத்தை ஓரிரு வரிகளில் ( பேசுவதருக்கு தயார் செய்துக்கொண்டு போகாததால்) தெரிவித்து முடித்துக்கொண்டேன். கடைசி கட்டத்தில் திரு.ஜெகதிசன் பேசுவதற்கும், அவருக்கு பொன்னாடை அணிவிக்கவும் வலியுறித்தியதாக திரு.சிம்மசந்திரன் பிரிதொரு சமயத்தில் என்னிடம் தெரிவித்தார்.

விழா முடிவடைய இரவு கூடுதலான நேரம் ஆகிவிட்டபடியாலும், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நின்று விட்டபடியாலும் வாகனவசதியில்லாத ஊனமுற்றவர்கள் விழாவில் கலந்துக் கொண்ட மற்றவர்களின் வாகன உதவியுடன் வெளியேறிக் கொண்டிறிப்பினும் கடைசியில் இரு ஊனமுற்ற பெண்கள் வெளியேற வழியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மாநிலசங்கத்தை சேர்ந்த செல்வியும், மேற்கு மாம்பழத்தை சேர்ந்த மற்றொரு யுவதியுமாகும். யுவதியை தியாகராயநகர் பஸ் ஸ்டேண்டில் அழைத்து போய் விட்டு விட்டு, மீண்டும் விழா நடைப் பெற்ற இடத்திற்கு வந்து, ரோட்டில் தனியாக நின்றுக் கொண்டிருந்த செல்வியை சைதாப்பேட்டை பஸ் ஸ்டேண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றடைய நேரமாகிவிட்டது. அடுத்தது அடுத்ததில்....

Thursday, November 5, 2009

எனக்கும் -42

நான் படித்த காலத்தில் விளையாட்டுநேரம் என்று பள்ளி பாடநேர அட்டவணையிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்பெண்களும் உண்டு. ஆனால் நான் ஊனமுற்றவன் என்பதால், விளையாட்டு பயிற்சியில் விலக்கு அளித்து சான்று அளித்தார்கள். விளையாட்டுகளில் எவ்வளவுதான் ஆர்வம் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க விரும்பாததால் எனக்கு இது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு ஆசிரியர்களும் இல்லாத நேரங்களில், மற்ற மாணவர்களுடனும், தனியாகவும் அமர்ந்தபடியே சாட்புட் ( இரும்புகுண்டு) வீசுவது, பில்லப்ஸ் எடுப்பது ஆகிய பயிற்ச்சிகளை எடுத்து வந்தேன். இந்த இரு போட்டிகளிலும் என்னுடன் போட்டி போட்ட நண்பர்கள் யாரும் வெற்றியடைந்ததில்லை என்பதை பெருமையாக நினைவிற் கொள்கிறேன். பள்ளி சார்பாக எந்த ஒரு போட்டியிலும் கலந்துக் கொண்டதும் இல்லை. எனக்கு தெரியும் என ஆசிரியர்களிடம் காட்டிக் கொண்டதுமில்லை.

ஒரு சமயம் எங்கள் ஊருக்கு தாலுக்காவாக இருந்த அரூரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே கபடிப் போட்டி (சடுகுடு) நடந்தது. எங்கள் ஊர் பள்ளி குழுவுடன் நானும் பார்வையாளனாக சென்றிருந்தேன். நான் பூட்ஸ், ஊன்றுகோல்கள் உதவியுடன் அங்குமிங்குமாக எங்கள் குழுவுடன் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற பள்ளி மாணவர்கள், என்னையும் குழுவின் அங்கமாக நினைத்துக் கொண்டு, இவர் குழுவிலே உண்டா? எப்படி விளையாடுவார்? எங்கள் ஊர் மாணவர்களிடம் விசாரிக்க, இதுதான் வாய்ப்பு என, அமர்ந்தபடியே விளையாடுவார், அவரிடம் மாட்டிக் கொண்டவர்கள் தப்பித்து செல்லவே முடியாது என வாயிக்கு வந்தபடியெல்லாம் கலாய்க்க, எங்கள் ஊர் குழுவுடன் மோதயிருந்த முதல் குழு எச்சரிக்கையுடனும், பயத்துடனும் களமிறங்க, மற்ற குழுவினரோ எதிர்ப்பார்ப்புடன் குமிழியிருக்க, எங்கள் குழு களமிறங்கியது நான்னின்றி. அப்பொழுதும் எனைப்பற்றி கேட்டவர்களுக்கும் பலம்வாய்ந்த அணிக்கு மட்டும் தேவைப்பட்டால் களமிறங்குவார் என சொல்லி கிலியூட்ட, நானோ மற்றவர்கள் எனைப்பற்றி அலாசுவதை செவிமடுத்துக் கொண்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன். எங்கள் குழு விளையாடிய கடைசி போட்டி வரை, நான் களம் இறங்காததைக் கண்ட பிறகுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நிலை அடைந்தபோது ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அடைந்த சந்தோசத்தையும், குதித்து கும்மாளம் போட்டதையும் சொல்ல தேவையில்லை. யாருமே கடைசிவரை என்னிடம் நேரடியாக விசாரிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.



Friday, October 9, 2009

நாட்குறிப்பு- 2009 - 9

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் ஊனமுற்றோருக்கான சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை கூட்டத்தில் சமிப காலமாக கலந்துகொள்கிறேன். இம்முறை ஆகஸ்ட் முதல் வாரம் கலந்துக் கொள்ளமுடியாத நிலையேற்பட்டது. அதனால் ஜுலை மாதம் 25ந் தேதி மீண்டும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றேன். தலைவரின் அலுவலின் காரணமாக விரைவிலே சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்படவும், நான் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. ஆனால் மாநில சங்க பொறுப்பில் இருக்கும் திரு. நந்தகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரும் 30/08/2009 அன்று நடைப்பெற உள்ள தனது மூத்தமகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமண நாள் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிப் பற்றியே மறந்துவிட்டேன். மாநில சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "உதவிகரம்" ஆகஸ்ட் மாதத்துக்கு உரிய இதழ் ஆகஸ்ட் 29 ம் தேதி எனக்கு கிடைத்து. அதிலிருந்த திருமணத் தகவலைக் கண்டு ஒரு நிமிடம் தவறவிட்டு விட்டேனோ என அதிர்ந்து விட்டேன். அவசர அவசரமாக அன்று மாலை நடைப்பெற்ற திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டேன்.

செப்டம்பர் மாதத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான்கு விழாக்களுக்கு சென்று வந்தேன். முதலில் எனது மனைவியின் சகோதரி முறையாகின்ற உறவினர் திருமதி.லக்ஷ்மி ரங்கநாதன் W/O. Y.K. ரங்கநாதன் செட்டியார் அவர்களின் மூத்தமகன் முரளி (எ) செந்தில்குமாரின் 02/09/2009 ந் தேதி திருச்சியில் நடைப்பெற்ற திருமணத்திற்கு எம் குடும்பத்தின் சார்பாக எனது மனைவி சென்றுவர, 06/09/2009 அன்று மாலை சென்னையில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தில் அனைவரும் கலந்துக் கொண்டோம்.

இங்கு 02/09/2009 ந் தேதி சென்னையில் திருவாண்மியூரில் நடந்த வீட்டு உரிமையாளரின் சிறிய மகளின் திருமண வரவேற்புக்கு ( ரிசப்சனுக்கு) நான் சென்று வந்தேன். என்னால் மேடை ஏறமுடியாததால், வீட்டு ஒனரிடமே அன்பளிப்பை அளித்துவிட்டு வந்துவிட்டேன். விழாவில் என் அருகில் அமர்ந்த வீட்டு ஒனரின் 85 வயதான அப்பாவிடம் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாய் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர். திரு.T.A.P.வரதகுட்டி அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்தநாள்) விழா 20/09/2009 அன்று நடைப்பெற உள்ளதாகவும், அழைப்பிதழ் இ-மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், கலந்துக் கொள்ளச்சொல்லி தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபடி கலந்துக் கொண்டதுடன் , விழா தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.

அதுசமயம் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பும் புதியவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்தது. நண்பர் சாமுவேல் ஜெயசிங், டாக்டர்.திருமதி.சந்திரா சாய்நாத் அவர்களிடமும் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டது மகிழ்வான தருணமாகும். செப்டம்பர் மாத நிகழ்ச்சிகள் அடுத்ததிலும் தொடருகிறது......

Thursday, October 8, 2009

நாட்குறிப்பு 2009 - 8

அடுத்தது ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஞாயிறுகிழமை வாராந்திர இலவச விளம்பர இதழ் ஒன்றில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பும், திரைபட சங்கமும் இணைந்து ஊனமுற்றவர்களின் திறமைகளை கண்டறியும், ஊக்குவிக்கும் விழா 18ந் தேதி சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறுகிழமை மாலை வரை தொடர்வதாக செய்தி வந்திருந்தது. அந்த இதழ் மதியம்தான் எனக்கு கிடைத்திருந்தாலும், அந்த விழா நான் இருந்தபகுதியில் நடந்துக் கொண்டிருந்ததால் கலந்துக்கொண்டேன்.

அதில் சின்னதிரை, பெரியதிரைகளை சேர்ந்த தயாரிப்பு, நடிப்பு, பாடல், கதை, இசையமைப்பு மற்றும் அந்த துறைகளை சார்ந்த பலர் கலந்துக் கொண்டார்கள். நான் என்னுடைய எண்ணங்களையும் முன்பாகவே எழுதி வைத்திருந்த கவிதைகள் சிலவற்றையும் மேடையில் ஏறி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருந்ததால், சினிமா கவிதை எழுதும் போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். அதனால் விழா தொகுப்பாளர், மேடை ஏற வேண்டும் என்ற என்னை தவிர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் விடாமல்.மேடைக்கருகில் கண்ணுக்கு படும்படியாக அமர்ந்துக் கொண்டு அவரை சைகை காட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக விழா முடிவுறும் நேரத்தில் கடைசியாக என்னை அனுமதித்தார். இவர் போட்டியாளர் இல்லை. மேடையேறி பேசவேண்டுமென்று விடாபிடியாக இருப்பதால், இவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என அறிவித்து விட்டே அனுமதித்தார். அதே சமயம் நான் பேச ஆரம்பிக்கும் போதே நிகழ்ச்சி முடிவுக்கென சிறப்பு அழைப்பாளர்களை மேடைக்கு அழைத்து விட்டார்.

நான் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல், என் கருத்தை இயம்பவும், மேடைப்பேச்சுக்கு என்னை தயார் செய்துக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தேயென பயன்படுத்திக் கொண்டேன். அது போலவே ஓரிரு சிறிய பேச்சு தவறுகளுடன் மனதிருப்தியுடன் முடித்தேன். சிறப்பு அழைப்பாளர்களும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பரிசுகள் வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மழை ஆரம்பமாகி விட்டது. அதனால் அங்கிருந்த அனைவரும் விழா நடந்த பள்ளிகட்டடத்திலேயே உள்ளே ஒதுங்கினார்கள். ஆனால் உள்ளே செல்வதற்கான படி உயரமானதாக இருந்ததால், நான் மேடையிலேயே நனையாதபடி ஒதுங்கி அமர்ந்து விட்டேன். ஆதனால் சிறப்பு அழைப்பாளர்களுடன் நெருக்கமான அறிமுகம் செய்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். அதை பிறகு உணர்ந்த நான் வருத்தப்பட்டேன். இளம் கதாநாயகனாக திரையுலகில் தற்போது உள்ள ''முகில்'' என்ற நடிகர் அவராகவே முன்வந்து வாழ்த்து தெரிவித்ததும், விடைப்பெறும்போது சொல்லிச் சென்றதும் மரியாதைக்குறியதாக இருந்தது.

அடுத்ததில்.....

நாட்குறிப்பு 2009 - 7






அம்மாவின் நினைவுநாள் ஆங்கில நாட்காட்டிப்படி ஜூன் 30ஆம் தேதி வந்தாலும் திதி படி ஜூலைமாதம் 4ஆம் தேதிதான் எங்கள் வழக்கப்படி அனுஷ்டித்தோம். 11ந் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் போன் வந்தது, 12ந் தேதி ஞாயிறு கிழமை 10 மணி அளவில் ஊனமுற்றோருக்கான ஒரு சங்கம் சென்னை கிண்டியில் துவக்கப்பட உள்ளது. அவசியம் கலந்துக் கொண்டு கருத்துக்களைக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் சென்று சேரவேண்டியவன். இடம் கண்டு பிடிக்கமுடியாமல் 2 மணிநேர தாமதமாக 11.30 மணிக்கு சென்றடைந்தேன்.

ஓ.. அழைத்ததற்கு மரியாதையில்லாதது போல் இவ்வளவு தாமதமாகி விட்டதே என சஞ்சலத்துடன் அங்கே சென்றால்!, கூட்டம் நடைப்பெறுவதற்குறிய எந்த அறிகுறியுமில்லாமல் இருந்ததைக் கண்டு, நிகழ்ச்சி முடிந்து விட்டது போல் உள்ளது. அதனால் தான் இங்கு யாரும் இல்லை போலிருக்கிறது, அல்லது இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சந்தேகத்துடனே, அங்குதான் கூட்டம் தாமதமாக நடைப்பெறயிருப்பதையும், பொருப்பாளர்களே இன்னும் வராத்தைப் பற்றியும், அங்கிருந்த ஓரிருவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் கூட்டமும் ஆரம்பமானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓரிரு கவிதைகளை கூறி என் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டேன். அங்கு சமபந்தி போஜனம் முடித்துக் கொண்டு கிளம்பினேன்.

Thursday, July 16, 2009

எனக்கும் -41

வாலிபத்தில் ஒரு கண்டம்

என் புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் யாராவது என் வீட்டில் கொடுத்து விடுவார்கள். நான் நடந்து சென்று வர ஆரம்பித்திருந்தேன். ஒரு நாள் பள்ளி முடிந்ததும்  எனது வகுப்பு தோழனும் உறவினனுமான ஜெயக்குமார் என்பவனும் நானும் பேசியபடியே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது  '' என்னம்மா ராணி, பொன்னான மேனி ஆளவட்டம் போட வந்ததோ '' என்ற சினிமாபாடலை  சில வரிகள் பாடினான். அங்குதான் ஆரம்பித்து வினை எங்கள் வகுப்பு மாணவி விஜயராணி () ராணி பின்னால் வந்து கொண்டிருந்திருக்கிறாள். அவன் அவளை நோக்கித்தான் பாடினானா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவளோ, அவளை நோக்கித்தான் கேலி செய்து பாடியதாக சண்டைப்போட்டாள். அவன் இல்லையென மறுத்து விட்டு, இடையிலேயே அவன் வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டு வழியாகவும்  எங்கள் வீட்டிற்கு செல்லலாம், இருப்பினும் அப்பொழுது அந்த வழியாக போகும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் செல்லும் நேர்வழியாகவே வீட்டிற்கு தனியாக சென்றுக் கொண்டிருந்தேன். அவள் வீட்டைத்தாண்டி தான் செல்ல வேண்டும். .

அவள் அவள் அம்மாவிடம் புகார் செய்து விட, என் வரவை எதிர் நோக்கி அவர்கள் வீட்டு வாசலில் காத்திருந்த அவள் அம்மாவோ, நீ நல்ல பையனல்லவா, என் மகளை கேலி செய்து இப்படி பாட்டு பாடலாமா கேட்க, என்னடாயிது நாம் பாடியது போல் மாட்டிக் கொண்டோமே உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டேன். நான் படவில்லையென மறுக்க, அவன் இவளை நோக்கிதானே பாடினான் என கேட்டார்கள். நான் ரோட்டை கவனித்து நடந்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெரியாது. என்னுடன் எப்பொழுதும் யாராவது உடன் வருவார்கள். அதுபோல் இன்று இவன் வந்தான் என்று கூறியபின் அவனை பிறகு பார்த்துக் கொள்கிறேன் என கூறி என்னை விட்டுவிட்டார்கள்.


இருப்பினும் இது பிரச்சனை ஆகப்போகிறது, நம்மை மீண்டும் விசாரிக்கப் போகிறார்கள் என சில நாட்கள் தயக்கத்திலேயே இருந்தேன். ஆனால்      ,,,,,,,,, பயந்ததைப்போல் பள்ளியிலோ மற்றும் எங்கும் அவள் பிரச்சனை எழுப்பாத்தால், பெரிய கண்டத்திலிருந்து தப்பியதைப்போல் உணர்ந்தேன். பின்னாளில் அவள் தம்பி பசுவராஜன் () பசுவன் எங்கள் நண்பர்கள் ஒருவனானான்

Tuesday, July 14, 2009

நாட்குறிப்பு 2009 - 6

இந்த ஜூன் மாதத்தில் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்சிகள்.
ஒன்று, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற '' உதவிகரம்'' ஜூன் மாத இதழில், சிறு கால இடைவெளிக்கு பின் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் அனுபவித்த சிரமங்கள் ''வாசகர் வாய்ஸ்'' என்ற பகுதியில் ஒரு செய்தியும், என் புகைப்படத்துடன் மற்றொரு தகவலும் வந்ததாகும்..
அடுத்தது கடைசி வாரம் 26 ந் தேதி, எனது பெரிய மகள் பணிபுரிகின்ற அலுவலகத்தில் குடும்ப விழா ( Family Day ) என்ற பெயரில் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தார்கள். நாங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டோம். அங்கு பணிபுரிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கவிதையை எழுதி எடுத்து சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அனுமதிப் பெற்று, '' நீங்களும் பிரம்மாக்களே '' என்ற தலைப்பில் கவிதையை வாசித்தேன். மீண்டும் ஒரு பொது இடத்தில் என் கவிதையை வாசித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது மகிழ்வாக இருந்தது. கவிதை வாசித்த வகையில் இது மூன்றாவது பொதுக்களம் ஆகும்.
இதில் மற்றொரு சிறப்பான தகவல் என்னவென்றால், என் மகளுடன் பணியாற்றுகின்றவர்கள், உன் அப்பா கவிதையில் நன்றாக வாழ்த்தினார் என அவளிடம் பாராட்ட, அதில் அவள் மகிழ்ந்தது தான், மேலும் மகிழ்ச்சியை எனக்கு தந்தது. அதில் கலந்துக் கொண்டதற்கு குடும்ப புகைப்படமும், கவிதை வாசித்தப் போது எடுத்த புகைப்படமும், டேபிளில் வைப்பதற்கு ஏற்றவாறு லேமினேசன் செய்து கொடுத்து கௌரவித்தார்கள். கவிதையை வாசிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலுக்காக, இதோ கீழே.

நீங்களும் பிரம்மாக்களே!....

கருக் கொள்ளும்
எண்ணங்கள்,
உருக் கொள்ளும்
செயல் விசையாய்.
கற்று தேர்ந்த
அறிஞர்களாய்,
உயிர் கொடுப்பீர்
தெய்வங்களாய்.
இயக்கும் விசை
பலவற்றை,
இணைத்து வைப்பீர்
எண் கொண்டே.
சிந்தனையில்
மனமிருக்கும்,
சிக்கல்களாய்
செயலிருக்கும்.
முடிவினிலே
பொருளிருக்கும்,
சிலை வடிவாய்
அது இருக்கும்.
அத்தனையும்
கொலுவிருக்கும்,
கைவண்ணம்
அதிலிருக்கும்.
செயலிலே செம்மையாக
செயல்படும் உங்களைத்தான்,
வெற்றி மீது
வெற்றி பெற்று,
வெல்க என்றே
வாழத்தினேன் இன்றே!.

Monday, July 13, 2009

நாட்குறிப்பு - 2009 - 5

சுமார் 3 மாத காலமாக பார்லிமெண்ட் ( பாராளுமன்றம்) தேர்தலை ஒட்டி ஓயாமல் ஒலித்த அரசியல் வசவுகள் முடிவடைந்தது. ஓட்டுக்காக, பணமும் மதுவும் ஆற்று வெள்ளமாய் பல இடங்களில் பெருக்கெடுத்தோட, இன்று ( \04\2009 ) ஓட்டு பதிவு நடந்தது. அட நானும் இந்த நாட்டின் குடிமகன் அல்லவா!!!!!!!!!!, கண்டுக்கொள்ள ஆட்களின்றி (பணம் கொடுக்கத்தாங்க!, சீரியஸா எடுத்துக்காதிங்க) ஓட்டுப் போட என் மயில் வாகனத்தில் பறந்துச் (விரைந்து) சென்றேன். இதுக்கு மேல நாடந்த கூத்துக்களை கேளுங்களேன். பூத்துக்கு அருகில் வண்டியுடன் போக வாக்குசாவடிக்கு உள்ளே நுழையப்போனேன். அந்த நேரம் சடாருனு ஒரு போலீஸ்காரர் வழிமறிச்சு எங்கே போறிங்கன்னு கேட்டாரு!. அட! என்னடாயிது ஓட்டுச்சாவடிக்கு இந்த நேரத்திலே எதுக்கு வருவாங்க? இருந்தாலும் பதில் சொன்னேங்க, ஓட்டு போடன்னு. அப்படினா, கேட்டுக்கு வெளியிலே வண்டிய நிறுத்திட்டு நடந்து போனாரு. ஐயா, என்னால நடக்கமுடியாததாலே எப்பவுமே பூத்து வரைக்கும் வண்டியில போய்தான் ஓட்டு போடுவேன். வழிவுடுங்கனு சொன்னத்துக்கு, இப்படியே நில்லுங்க, கேட்டுட்டு வரேனு திரும்ப, வெயிலா இருக்குதேனு வண்டிய நிழலில நிறுத்தக் கூட அனுமதிக்க மறுத்தாருங்க. என்னடா குத்தம் செஞ்சவங்கள நடத்தரமாதிரி நடத்தராரேனு, ஐயா உங்க வேலைக்காக நீங்க வெயிலிலே நிக்கிறிங்க, நான எதுக்கு இப்ப நிக்கனுமுனு கோபம் வந்து கேட்டுபுட்டேன். இன்னொரு போலீஸ்காரரு என்னோட ஓட்டர் சிலிப்பை பார்த்துட்டு, வேற வாக்குசாவடிக்கு நானு போகனுமுனு சொல்லி வழிச்சொன்னாரு. அப்போழுதான் போக வேண்டிய வாக்குசாவடியை தவறவிட்டு வேறு வாக்குசாவடிக்கு மோப்பம் புடிச்சு போய்ட்டேனு தெரிஞ்சது. திருப்பு அந்தபக்கமுனு, அங்கபோனா வண்டிய உள்ள உடமுடியாதுனு அதே கதை கதைங்க. நானா உடுவேன். ஐயா, ஓட்டு போடறது என் உரிமை, அதுக்கு உதவறது உங்க கடமையினு, அடுக்குமொழியிலே சொல்லி, யார் உங்க மேலதிகாரியோ, அவர கூப்பிடுங்க, கேட்டுட்டு போறேனு விடாம சொன்ன நேரத்திலே, கேட்டுக்கு உள்ளயிருந்து வந்த ஒரு போலீஸ்காரரு, கேட்டுலே போலீஸை சமாதானப்படுத்தி, என்ன உள்ள விட்டாரு. ஒரு வழியா ஓட்டு குத்தி என் கடமைய முடிச்சிடு, ஜெயிச்சு வரவங்க நமக்கு செய்யவேண்டிய கடமைய சரியா செய்வாங்களானு ஏக்கத்தோடு வீட்டுக்கு வந்துட்டனேங்க.

நாட்குறிப்பு 2009 - 4

பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான செய்திகளின்றி கழிந்தது. இந்த ஏப்ரல் மாதம் நினைவில் நிற்கக் கூடியதாய் அமைந்தது. 13ந் தேதி எங்கள் அப்பாவிற்கு பிறந்தநாள். 88 வருடங்கள் கழித்து, 89வது வயதிற்குள் நுழைந்திருக்கிறார். அவர் விருப்பப்படி அவர் உடற்பயிற்சி செய்து வரும் ஜெராசிம் சென்டரில் கேக் வெட்டியும், அங்கு பணியாற்றுகின்ற உதவியாளர்களுக்கு பரிசுப்பொருள் அளித்தும் பிறந்தநாள் கொண்டாடினார். பரிசுப்பொருட்களை நான் எடுத்து சென்றுக்கொண்டிருந்த போது, மாற்றுதிறனுடைய ஒரு இளஞி தன் தாயாரை வண்டியின் பின் அமர வைத்தப்படி எனக்கு முன்னாள் விரைந்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட நான் விரைந்து சென்று குறிக்கிட்டு நிறுத்தி ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். கணனி வேலையிழந்து பணிக்காக அலைந்துக் கொண்டிருப்பதுடன், வேலை வாய்ப்பு இருப்பின் வேலைக்கிடைக்க உதவும்படியும், உறவினர் திருமணத்திற்காக மண்டபம் தேடி சென்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்க, மண்டபத்திற்கு வழி காட்டி விட்டு, வேலை கிடைக்க முடிந்த வரை உதவுவதாக கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். இதை தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் நான் பலரிடம் சொல்லி வேலை கிடைக்க ஏற்பாடு செய்துக் கொண்டிருக்க, அவ்வப்பொது அந்த இளஞியும் கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்) தேவையான தகவல்களை என்னிடம் பெற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை நடைப்பெறும் எங்கள் உடல் ஊனமுற்றோர் சங்க சந்திப்புக் கூட்டத்திற்கு செல்ல அறிவுறித்திருந்தேன். அதற்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது பெரிய தம்பி, அன்று பயணம் மேற்கொள்ளவிருந்ததால், உதவிக்கு வரயியலாத நிலையை எடுத்து சொல்ல ஓரிரு முறை முயன்றும் தொலைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. அன்றைய சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு கணனி வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றியும், உடன் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் அந்த இளஞியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவள் இல்லை, வேலை கிடைத்து விட்டது, இனிமேல் இந்த எண்ணிற்கு தொடர்புக் கொள்ள வேண்டாம் அறிமுகமில்லாத யாரோ ஒருவர் பேசுவது போல இணைப்பை துண்டித்து விட்டார். வேலை வாங்கிதர கேட்டு இன்று காலை (18\04\09)
வரை தொடர்பு கொண்டவருக்கு, என்ன ஆனது?
உதவி செய்ய நினைத்து மூக்கு அறுப்பட்ட நிலையாக அதிர்ந்து விட்டேன். இந்த விசயத்தை ஜிரணித்துக் கொள்ள சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த மாதம் இவ்வளவு தான். அடுத்து என்ன?

Friday, July 10, 2009

நாட்குறிப்பு 2009 - 3

ஒரு வழியாக பேபி வீல்சேர் வந்தது. அதில் மிகவும் குறுகி அமர்ந்து என் ஊன்று கோல்களையும் கையில் பிடித்துக் கொண்டு தண்டவாளங்களையும் பிளாட்பாரங்களிலிருந்த மேடு பள்ளங்களை கடந்து நான் ஏற வேண்டிய ரயில் பெட்டியை வந்தடைந்தேன். என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்த இரயில் நிலைய ஊழியரை சும்மா அனுப்ப மனம் வரவில்லை. பணம் கொடுத்ததற்கு வேண்டாமென மறுத்தவருக்கும் வலுகட்டாயமாக கையில் திணித்து அனுப்பி வைத்தோம். என்ன குரங்கு மனமடா! இலவசமாக செய்ய வேண்டியதற்கு யாராவது பணம் கேட்டால் கோபம் வருகிறது. வேண்டாமென்பவருக்கு கையில் திணித்து அனுப்புகிறோம். விடியற்காலை 4,30 மணி சுமாருக்கு ஆத்தூர் சென்றடைந்துவிடுமென்றதால், இரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்ற பிறகு எங்கே தூக்கம். அறைகுறை தான். அன்று திருமணநாளாக இருந்ததால், நான் இருந்த பெட்டியில் பாதி பேர் ஆத்தூரில் இறங்குபவர்களாக இருந்தார்கள். இரயில் சரியாக எத்தனை மணிக்கு சேருமென தெரியாததால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வாசற்படியில் திபுதிபுவென கூட்டம். ரயில் தாமதமானதாலும், சிறிய நிலையங்களில் போதுமான வெளிச்சத்துடன் பெயர் பலகைகள் இல்லாததாலும் தடுமாறினார்கள். ஊர் வந்ததும், பிளாட்பாரத்தின் கடைசியில் நாங்கள் இறங்கவேண்டிய பெட்டி இருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் தான் ஆத்தூர் லன்யஸ் கிளப் மூலமாக வீல்சேர் ஒன்றை இரயில் நிலையத்திற்கு நன்கொடை அளித்திருந்ததால் எனக்கு மிக்க வசதியாக அமைந்தது.சென்னைக்கு திரும்பும்போது நாங்கள் ஏறவேண்டிய இரயில் பெட்டி நிற்குமிடத்தை கேட்டு அந்த இடத்தில் ( பிளாட்பாரத்தில் ) இறங்கிக் கொண்டு வீல்சேரை வேறு யாருக்காவது தேவைப்படுமென அனுப்பி வைத்து விட்டேன். மீண்டும் சோதனை இரயில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் முன்னோக்கி சென்று விட்டதுடன் பிளாட்பாரம் தாழ்வாக இருந்ததால் கீழ்யிருந்து இரண்டு மூன்று பேர் தூக்கிவிட, பெட்டியினுள்ளிருந்து இரண்டு மூன்று பேர் மூட்டைப் போல் என்னை இழுத்து ஏற்ற விட்டார்கள். சென்னை வந்ததும் பழைய நிலைபடியே எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து வீடு வந்தடைந்தேன். அடுத்தது மறக்க முடியா ஏப்ரல் மாத நிகழ்சியை அடுத்து பார்ப்போமா...

Thursday, July 9, 2009

வந்த கனவு - 5

சமிபத்தில் சில கனவுகள் வித்தியாசமாகவும் கோர்வையாகவும் அமைதியான நீரோட்டம் போலவும் அமைந்திருந்தது. ஆனால் விழிப்பு வந்ததும், அந்த கனவுகளை ஒரு முறைக்கு இரு முறையாக கனவுகளை நினைவு படுத்தி மனத்தில் பதித்துக் கொள்ளாத்துடன் நடைமுறை நிகழ்வுகளில் மனம் இலயத்து விட்டதாலும் சிறிது நேரத்தில் கனவுகள் நினைவிலிருந்து அகன்று விட்டது. பிறகு ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றும், ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு நிகழ்வு மட்டும் நினைவில் ஆழப் பதிந்து விட்டது. ஆதாவது ஒரு கனவு மனத்தை மிகவும் சலனப்படுத்தியது. அதனால் விழிப்பு வந்தது, ஆனாலும் உடல் மிக்க சோர்வடைந்திருந்ததால், உடனே மீண்டும் உறக்கத்தில் கண் அயர்ந்தது. ஆனால் ஒரிரு நிமிடங்களில் வந்த கனவின் ஆரம்பமே நடக்க ஆரம்பித்த நான் தரையில் வழுக்கி விழுவதைப்போல் கனவு வர, என் உடல் தூக்கிப் போட துடித்தெழுந்தேன். பிறகென்ன தூக்கமும் கலைந்தது. இது எதனால் ஏற்பட்டது என சிந்தனையில் ஆழ்ந்தேன். விடையோ இல்லை. அடுத்ததைப் பார்ப்போமா வித்தியாசமாய்.....

Tuesday, June 30, 2009

வந்த கனவு -4

அட என்ன கர்மமடா. இப்படியும் கனவா? என்ன கதை விடுகிறாயா? என்று கேட்காதீர்கள். வந்த கனவு தான் இது. ஆரம்பிக்கட்டுமா?....

ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும் பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது.

அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து, என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள்.

அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது. அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவணக்கவும், படித்தவணக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான். எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்வது கண்டு, எப்படியும் இவனை மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது எபதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புருத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே திருவேனென்ற என் சபதமுடன், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்த் போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து. இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை....
அட என்ன கர்மமடா. இப்படியும் கனவா? என்ன கதை விடுகிறாயா? என்று கேட்காதீர்கள். வந்த கனவு தான் இது. ஆரம்பிக்கட்டுமா?....

ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும் பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது.

அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து, என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள்.

அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது. அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவனாக்கவும், படித்தவனாக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான். எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்லும் இவனை, எப்படியும் மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் பார்த்தக் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே தீருவேனென்ற என் சபதமும், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்து போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து. இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை....

Thursday, June 4, 2009

வந்த கனவு -3


ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும் பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது.

அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து, என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள்.

அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது. அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவனாக்கவும், படித்தவனாக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான். எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்லும் இவனை, எப்படியும் மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் பார்த்தக் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே தீருவேனென்ற என் சபதமும், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்து போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து. இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை....

Tuesday, June 2, 2009

வந்த கனவு -2

riday, May 29, 2009

இன்று விடியற்காலை வந்த இந்த கனவும் ஒரு வித்தியாசமானது தான். விழிப்பு வந்த நேரமோ காலை 4 மணி. இது ஒரு மதக்கனவு. " நன் மக்கட்பேரவை" என்ற ஒரு அமைப்பு, இது வெளிநாட்டு கிருத்துவ அமைப்புகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்களைப் பெற்று இங்குள்ள வருவாய் குறைந்த அடித்தட்டு மக்களுக்கு பொருட்களையும் பணத்தையும் கொடுத்து மெதுவாக மதமாற்றம் செய்து வருகின்றார்கள். ஒரு சமயம் அதைப் பற்றி "இந்து சேவை சங்கம்" என்ற அமைப்பிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்களோ, வெளிநாட்டிளிருந்து கையேந்தி பிச்சை எடுத்து, நம் நாட்டினரை பிச்சைக்கார ர்களாயும், சோம்பேறிகளாகவும் மாற்றி தங்கள் தேவைகளை பெருக்கிக் கொள்ளும் கூட்டமென சாடுகிறார்கள். இதைக் கேள்விப் பட்ட நன்மக்கட்பேரவையோ, நீங்கள் செய்திருந்தால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கமாட்டோமே என குறைக் கூறுகிறார்கள். நாங்கள் செய்தால் உங்களுக்கு வருமானம் கிடைக்காது. நீங்கள் சேவை செய்கிறோம் என்ற பெயரில் செல்வம் சேர்க்கவோ, உல்லாசமாக இருக்கவோ முடியாது. ஆகவேதான் நீங்கள் வெளிநாட்டுக்கார ர்களை நாடுகிறீர்களே தவிர வேறொன்ருமில்லையென திருப்பி பதிலலிக்க, இப்படியே விவாதம் நீண்டுக் கொண்டு போகிறது. இதில் சில பலமான வார்த்தை பிரயோகங்கள் நடக்கின்றபோது விழிப்பு வந்து விட்டது. இந்த கனவு எதனால் வந்தது? இது போன்ற பெயரில் அமைப்புகள் உள்ளனவா? ஒன்றுமே புரியவில்லை. அப்படிபட்ட அமப்புகள் இருப்பின் என்னை மன்னிக்க. கனவில் வந்ததை இதில் பதித்திருக்கிறேன். இரு சாரா ரும் பயன்படுத்திய மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்களை பதிபிக்கவில்லை

இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..

Sunday, May 31, 2009

எனக்கும்-40

சென்ற பதிவிலே அறிவித்த மாணவபருவ விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு பக்கம் மனது துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. . பக்கத்து ஊர்களிலிருந்து வருகின்ற மாணவ மாணவியர் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்று வர முடியாத்தால் நானும் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவேன். அன்று ஒரு மாணவரின் ( பெயர் வேண்டாம். ஏனெனில் தற்போது அவர் வங்கி மேலாளராக பணிப்புரிகிறார் ) மதிய உணவை, பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர் வீரகேசவன் ( அமரர் ஆகி விட்டார் ) நண்பனுக்கு தெரியாதவாறு,வகுப்பிலே பாடம் நடந்துக் கொண்டிருக்கின்ற பொழுதே எடுத்து சாப்பிட்டு விட்டார். சில பல மாணவர்கள் மற்ற மாணவர்களின் உணவை எடுத்து ருசி பார்ப்பதும், டிபன் பாக்ஸை எடுத்து மறைத்து வைப்பதும் அடிக்கடி நடக்கும் விளையாட்டாகும். ஏனோ யாரும் என்னிடம் அது போல் விளையாடமாட்டார்கள். நானும் யாருடையதையும் எடுத்து சாப்பிட மாட்டேன். பிறகு மதிய உணவு சாப்பிட டிபன்பாக்ஸ் திறக்கும்போது தான் அவனுக்கு தெரிந்தது. அன்று அவர் பசி பட்டினியோடு இருந்த கோபம், மறுநாள் பலி வாங்கும் படலம் அரங்கேறியது. அன்றும் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே, உணவை பறிகொடுத்த மாணவர், தன் உணவை சாப்பிட்டு விட்ட மாணவரின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, ஓஹோ,, ஏதோ தரப்போகிறார் என நினைத்து, பாடம் நடத்து ஆசிரியரை பார்த்தவறே கையை நிட்ட, மற்றொரு கையையும் இழுத்து சேர்த்து வைக்க ஓ.. நிறைய ஏதோ கொடுக்க போகிறான் என நினைத்துக் கொண்டு, கைகளை சேர்த்து நீட்ட, நாடகம் அரங்கேறியது. அப்பொழுது மாணவர்கள் 11 ஆம் வகுப்பு வரை அரைக்கால் சட்டை ( ட்ரவுசர் ) தான் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அதுவும் காக்கி யூனிபாரம். அதனால் மிக வசதியாக அமர்ந்த நிலையிலேயே, அவனின் கைகளில் சிறுநீர் கழித்து விட்டான். பாடம் கவணித்துக் கொண்டே கைகளை நீட்டிய அவனுக்கு சில நொடி கழிந்த பின் தான் கையில் ஈரத்தன்மையை உணர்ந்து பார்க்கையில் தான், இவருடைய செயல் தெரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக, ஆசிரியருக்கு தெரியாமல் மறைக்கவும், கைகளிலிருக்கும் சிறுநீரை எங்கே கொட்டுவது என தெரியாமல் தடுமாறினான். பெஞ்சுக்கு கீழேயே ஊற்றி விட்டான். வகுப்பாசிரியர் வெளியேறியதும், விபரமறிந்த வகுப்பறையே சிரிப்பலையிலும், கேலியிலும் அதிர்ந்ததை சொல்லத் தேவையில்லை.


சென்னையிலிருந்து இங்கு வந்த பிறகு முதன்முறையாக என்னை அறியாமலே வம்பில் மாட்டிக் கொண்ட நிகழ்ச்சியை அடுத்து பார்ப்போமா!

Saturday, May 30, 2009

எனக்கும்- 39

சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்ட நாங்கள், எங்கள் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொம்மிடி (பொன்முடி- )யில் இறங்கி, ஊருக்கு பேருந்தில் பயணம் செய்து சென்றடைந்தோம். அப்பொழுது சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிக் கூட கிடையாது. பஸ் ஸடாபிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்குள் நான்கு வருடங்கள் கழித்து முதல் முறையாக ஊருக்கு வருவதுடன், பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதையும் ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டு பள்ளி சிறுவர்களுடன் பெரியவர்கள் ஒரு கூட்டம் பின்னால் தொடர, நலம் விசாரிப்புகளுடன் வீட்டை அடைந்தேன்.


என் இரண்டாவது பெரிய சகோதரியான செல்வி.வசந்தகுமாரி அவர்கள், திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் ஆனார்கள். அவர்களின் திருமண விஷேசத்துடன், என்னைப் பற்றிய விசாரிப்புகளும் உறவினர்களிடம் இணையாக இருந்தது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், மீண்டும் எங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு வேலையாட்கள் மூலமாக சைக்கிளில் அமர வைத்து, பள்ளிக்கு சென்று வந்தேன். அப்பொழுது என் சிறிய சகோதரி ஜெகதீஸ்வரியின் வகுப்பு மாணவனானேன். நான் ஊனமுற்றவனாக இருப்பினும், மற்றவர்கள் என்னுடன் பழகுவதில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணும், வகுப்பு தோழி யுமான ( என் சிறிய சகோதரியின் நண்பி ) திருமதி. கெஜலட்சுமி மகாதேவன் ( எ ) கெஜலட்சுமி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் தேர்வுக்காக இரவு நேரம் எங்கள் வீட்டு ஒரு அறையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடிரென மின்சார துண்டித்தது. சிம்னி, அரிகேன் விளக்கு கொண்டு வர சென்ற எனது சகோதரி, வர சிறிது நேரமானதால், நானும் எனது தங்கையை நாடி வந்து விட்டேன். காரணம் யாரிடமும் அவ்வளவாக பழகவுமில்லை, தோழியுடன்இருட்டிலே தனியாக அமர்ந்துக் கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமலும், ஒரு வித கூச்ச உணர்வினாலும் அவளை தனியாக அறையிலே விட்டு விட்டு வந்து விட்டேன். அம்மாவும் சகோதரிகளும் அதற்காக திட்டினார்கள். அன்றிலிருந்து இன்று வரை என் இனிய தோழியாக இருக்கிறார். ஏழாம் வகுப்பு கழிந்தது.


எட்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் ஞாபகத்திலிருக்கிறது. ஒரு சமயம் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருந்த கலைச்செல்வன் என்னும் மாணவர், என்னை கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியரோ பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயமாதலால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கே ஆசிரியரிடம் மட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் அதற்குள் வகுப்பு நேரம் முடிந்ததால் ஆசிரியர் வெளியே சென்று விட்டார். அதுதான் சமயமென்று உடனே காரியத்தில் இறங்கினேன். அவன் கையை பிடித்து கீழே இழுத்தவாறு அக்குளில் விரல்களை வைத்து மேலே தூக்கினேன். அதனால் ஏற்பட்ட வலியால் விட்டுவிட கதறினான். என்னிடம் கிச்சு கிச்சு மூட்டும் விளையாட்டுகள் விளையாடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிய பிறகே விடுவித்தேன்.
அது குங்ஃபூ போல விரல்களை பயன்படுத்துவது. எப்படி அதை அறிந்துக் கொண்டேன் என்பது ஞாபகத்திலில்லை.. அடுத்த நினைவு சிறிது அசிங்கமாகத்தான் தெரியும். ஆனாலும் மாணவப்பருவ விளையாட்டல்லவா !
தொடரும்...

எனக்கும்-38

அங்கிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜூக்கு வந்து இறங்கினோம். உள் நுளைந்ததுமே மாடியில் ரூம் என அப்பா கூற, படிகட்டுகள் அருகில் நான் செல்லவும், அதே சமயத்தில் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான உருவத்துடன் வெள்ளை மீசையை முருக்கியபடி, பார்ப்பதற்கு ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியைப் போல் இருந்த ............. , இறங்குவதற்காக
வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் கீழே இறங்குவதற்காக நான் தயங்க, அங்கு வந்த அப்பாவோ, திருமணம் நடைப்பெற உள்ள இரண்டாவது சகோதரியின் மாமனார் என்று அறிமுகம் செய்து வைத்தார். அன்று அவர் படியில் நின்ற தோற்றம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை இந்த நேரத்தில் சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும். ஆந்திராகாரரான அவர் குடும்பத்துடன் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் குடியேறியவர்கள். அவர் குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பற்றவர். ஆனாலும் அனுபவ அறிவினாலும் விடாமுயற்சியினாலும் ஆங்கில நாளிதழான ''ஹிந்து'' வை படிக்கக் கூடிய தினசரி வாசகர் ஆவார். அத்துடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். ஆனால் உணர்ச்சி பூர்வமாகவோ, வேகமாகவோ பேசும்போது பல மொழிகளிலும் கலந்து பேசுவார். அது கேட்பவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அன்றிரவு ரயிலில் ஊருக்கு பயணமானோம். அதன் பிறகு பூட்ஸ்கள் ரிப்பேர் செய்வதற்கும், புதிதாய் மற்றுவதற்கும் அப்பாவுடன் ஓரிரு முறைகள் வந்தேன். பிறகு என் தனி ராஜியம் தான். அதற்கு பிந்தைய சென்னை அனுபவங்கள் அவ்வப்போது தொடரும்.....

Friday, May 29, 2009

வந்த கனவு -1

எல்லோருக்கும் வரும் பகல் கனவுகளை சொல்லவில்லை. இரவுகனவுகள் பலவிதமாக வரும். அப்படி எனக்கும் ஒரு இரவில் குறைந்தது இரண்டு கனவுகளாவது வந்து விடும். பல கனவுகள் நம்பமுடியாததாகவும், விச்சித்திரமாகவும் அமைந்திருக்கும். சில சமயங்களில் முழு இரவு தூக்கத்தையும் கெடுத்ததுண்டு. சிறுவயதிலிருந்தே அந்த கனவுகளை எழுதி வைக்க வேண்டும் என நினைத்ததுண்டு. எழுத வேண்டுமென்றாலே மிகவும் சோம்பல் எனக்கு. அப்படி பாதித்த கனவுகளை ஓறீரு நாட்கள் நினைவில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மறந்து விடுவேன். ஆனால் திடிரென ஒரு எண்ணம் தோன்றியது, வந்த கனவுகளை பதிவிலே பதித்தாலென்ன என. அதன் தாக்கமே இது.
பொருமையாக படித்து விட்டு திட்டுங்களேன். ஆரம்பிப்போமா அறுவையை.ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பிக்கிறது கனவுத் திரைப்படம். காணுங்களேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து.

ஒரு கட்டடத்தினுள்ளே மாடியிலிருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டவரைப் போலவும், மற்றோருவன் இந்திய நாட்டை சேர்ந்தவன் போலவும் இருக்கிறார்கள். இறங்கி வந்த அவர்களோ, வெளி வாசலிலிருந்தோ, மாடியிலிருந்தோ, அந்த கட்டடத்தினுள் செல்ல வருபவர்களை வழிமறித்து நிற்பதைப்போல் நிற்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, மடியிலிருந்து மூன்று மாணவிகள் இறங்கி வருகிறார்கள். இவர்கள் அந்த மாணவிகளிடம் ஏதோ கூற, மாணவிகளில் இருவர் மன்னிப்பு கேட்கும் விதமாக, அந்த வெளி நாட்டு மாணவர்களின் காலில் விழுந்து வணங்கவும், அவர்களும் மன்னித்ததின் அடையாளமாக ஒருவருக்கொருவர் ஜாடைக் காட்டி புன்முருவல் பூத்தபடி வெளிநாட்டு பாணியில் அந்த இரு மாணவியரையும் கட்டியணைத்து அவர்கள் காதில் ஏதோ முனுமுனுத்தபடி தட்டிக் கொடுத்து விடுவிக்கிறார்கள். ஆனால் மற்றோரு மாணவியோ நம் நாட்டு மாணவனின் காலில் விழாததுடன், இவள் அவனை கட்டியணைத்து புன்னகை செய்தபடி அவன் காதில் ஏதோ முனுமுனுக்கிறாள்.

அந்த மாணவிகள் உள்ளேசெல்ல, மாணவர்கள் வெளி வாசலை நோக்கி அடியெடுத்து வைக்க முற்படுகையில், இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கேலி சிரிப்பு சிரிக்கிறான். அதை உணர்ந்த இந்த மாணவர்கள், அவனை முறைத்து பார்கிறார்கள். ஆனால் அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் " சர்தான்... போங்கடா" என்கின்றான். வெளிநாட்டு மாணவர்களோ, தமிழ் தெரியாத நம் நாட்டு மாணவனிடம், உன்னைத்தான் கேலி செய்கிறான் என சீண்டிவிடுகிறார்கள்.. அவனும் இவனும் வாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். தமிழ் மாணவனோ, அந்த சமயத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த என் மனைவியை காட்டி, அவர்களிடம் புகார் செய்துக் கொள் என கை காட்டி விடுகிறான். இவன் என் மனைவியிடம் சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் என் மனைவிக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததாலும், கேட்கக் கூடிய பொருமையும் இல்லாததாலும், அங்கு தொங்கிக் கொண்டிருந்த போர்டை சைகையில் காட்டி விட்டு சென்று விடுகிறாள். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த நான், அவனை அருகில் அழைத்து விவரம் கேட்க, நான் ஆந்திராவை சேர்ந்தவன். என் பெயருக்கு முன்னாள் தாத்தா, அப்பா பெயர்களின் இன்சியலை சேர்த்து வைத்துள்ளேன். அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைக் கிண்டல் செய்வது போல் " சர்தான், போங்கடா" என்கின்றான். நீங்கள் அவனை தண்டிக்க வேண்டும் என கேட்கிறான். அப்பொழுதுதான் அவன் ஆந்திராகாரனென எனக்கு தெரிகிறது. அதனால் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு பெறியவர்களை அவன் கேவலப்படுத்தவில்லையென எனக்கு தெரிந்த
ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் சொல்லி சமாதனப்படுத்தினேன். இப்படி பேசிக்கொண்டே தலை குனிந்திருந்த நான், அந்த மாணவிகளிடம் என்ன பிரச்சனை என கேட்டவாரே தலைத் தூக்கிப் பார்த்தால், அவனும் அங்கில்லை, என் தூக்கமும் கலைந்தது.

இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..