வாலிபத்தில் ஒரு கண்டம்
என்
புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் யாராவது
என் வீட்டில் கொடுத்து விடுவார்கள்.
நான் நடந்து சென்று வர
ஆரம்பித்திருந்தேன். ஒரு நாள் பள்ளி
முடிந்ததும் எனது
வகுப்பு தோழனும் உறவினனுமான ஜெயக்குமார்
என்பவனும் நானும் பேசியபடியே வீட்டுக்கு
திரும்பிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது '' என்னம்மா ராணி, பொன்னான
மேனி ஆளவட்டம் போட வந்ததோ '' என்ற
சினிமாபாடலை சில
வரிகள் பாடினான். அங்குதான் ஆரம்பித்து
வினை எங்கள் வகுப்பு மாணவி
விஜயராணி (எ) ராணி பின்னால் வந்து
கொண்டிருந்திருக்கிறாள். அவன் அவளை நோக்கித்தான்
பாடினானா, இல்லையா என்பது எனக்கு
தெரியவில்லை. ஆனால் அவளோ, அவளை நோக்கித்தான்
கேலி செய்து பாடியதாக சண்டைப்போட்டாள்.
அவன் இல்லையென மறுத்து விட்டு, இடையிலேயே
அவன் வீட்டுக்கு சென்று
விட்டான். அவன் வீட்டு வழியாகவும் எங்கள் வீட்டிற்கு செல்லலாம்,
இருப்பினும் அப்பொழுது அந்த வழியாக
போகும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் செல்லும்
நேர்வழியாகவே வீட்டிற்கு தனியாக
சென்றுக் கொண்டிருந்தேன். அவள் வீட்டைத்தாண்டி தான் செல்ல வேண்டும். .
அவள்
அவள் அம்மாவிடம் புகார்
செய்து விட, என் வரவை
எதிர் நோக்கி அவர்கள் வீட்டு
வாசலில் காத்திருந்த அவள்
அம்மாவோ, நீ நல்ல பையனல்லவா, என் மகளை
கேலி செய்து இப்படி பாட்டு
பாடலாமா கேட்க, என்னடாயிது நாம்
பாடியது போல் மாட்டிக் கொண்டோமே
உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டேன். நான்
படவில்லையென மறுக்க, அவன் இவளை
நோக்கிதானே பாடினான் என கேட்டார்கள்.
நான் ரோட்டை கவனித்து நடந்துக்
கொண்டிருந்ததால் எனக்கு தெரியாது. என்னுடன் எப்பொழுதும்
யாராவது உடன் வருவார்கள். அதுபோல் இன்று
இவன் வந்தான் என்று கூறியபின்
அவனை பிறகு பார்த்துக் கொள்கிறேன்
என கூறி என்னை விட்டுவிட்டார்கள்.
இருப்பினும்
இது பிரச்சனை ஆகப்போகிறது, நம்மை மீண்டும்
விசாரிக்கப் போகிறார்கள் என சில
நாட்கள் தயக்கத்திலேயே இருந்தேன். ஆனால் ,,,,,,,,, பயந்ததைப்போல் பள்ளியிலோ
மற்றும் எங்கும் அவள் பிரச்சனை எழுப்பாத்தால்,
பெரிய கண்டத்திலிருந்து தப்பியதைப்போல் உணர்ந்தேன். பின்னாளில் அவள்
தம்பி பசுவராஜன் (எ) பசுவன் எங்கள்
நண்பர்கள் ஒருவனானான்.
No comments:
Post a Comment