Monday, February 8, 2010
நாட்குறிப்பு 2009
பாத்திங்களா! டைரி (நாட்குறிப்பு) எழுதறதைப் பத்தி முதலிலேயே எழுதியிருந்தபடி, இப்படிதாங்க பாதியிலேயே ஒவ்வொரு வருசமும் விட்டு விடுகிறேனுங்க. நவம்பர் மாதத்திலே முக்கியமா சில விசயமுங்க. அதுல ஒன்னு, இந்த மாத வாடகைய வீட்டு ஓனர் கிட்ட, என்னையே கொண்டு போய் கொடுக்க வீட்டுல சொன்னதால, நானே முதல் மாடிக்கு மெதுவா நகர்ந்து போய் வீட்டு ஓனரை கூப்பிட்டு செக் (காசோலை) கொடுத்திட்டு, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் (அக்ரிமென்ட் பேப்பர் ) கேட்டதுக்கு, உன்ன நம்பி வீட்ட வாடகைக்கு விடல, உன் மகளுக்காகதான் வீட்டை வாடகைக்கு விட்டேன், ஒப்பந்த பத்திரமும் தரமுடியாது என்று பலமாக பேசியதுடன், அவர் வீட்டு கதவையும் முகத்தில் அடிப்பது போல மூடிக் கொண்டு சென்று விட்டார். அதனால் டிசம்பர் மாத வாடகையை எனது மகளே கொண்டு போய் கொடுத்தபோது, ஏன் வாடகையை சேர்த்துக் கொடுக்கவில்லை, எப்பொழுது வீட்டை காலி செய்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள். அதற்கு என் மகளோ, முதலில் என் அப்பாவை ஏன் கேவலமாக பேசினீர்கள் என கேட்டதற்கு, உங்கள் வீட்டிலே இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதல்லவா, ஏன் இவ்வளவு ஆசைப்படுகிறீர்கள் என்று மரியாதைக் குறைவாக பேசிவிட்டார் என சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு நியாயமும் இல்லாமல் ஒரு வருடத்துக்குள் 2000 ரூபாய் வாடகையை உயர்த்தி கேட்டதால்தானே, நான் அந்த வார்த்தையை உபயோகப்படுத்த நேர்ந்தது. நான் சொன்ன இந்த வார்த்தையில் மரியாதைக் குறைவானது என்னவென்பது எனக்கு தெரியவில்லை. இந்த பதிவிலே இந்த ஒப்பாரியே பெரிதாக போய்விட்டது. அதனால் இத்துடன் முடித்துக் கொண்டு உங்களை அடுத்ததில் சந்திக்கிறேன்.............
Subscribe to:
Posts (Atom)