Sunday, June 30, 2013
உரசிய பெண் பேய்! - மறக்கவியலா நினைவுகள்.
ஆட்கள் நடமாட்டமில்லாத தனிமையான இரவு நேரம் எம் விருப்பமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். யான் கல்லூரி வகுப்பில் தேர்ச்சி பெற சேலத்தில் தங்கும் விடுதியில் தாங்கியபடி ஒரு டுடோரியலில் (Tutorial ) படித்து / படிப்பது போல் பாவித்து / வந்தேன், எம் தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்தினால் திரைப்படங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் தூக்கமின்றி தவித்த யான், விடுதியிலிருந்து வெளியேறி, வண்டி போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடியிருந்த, விளக்கொளி மட்டும் பரவியிருந்த, அமைதியான நேரான அந்த சாலையில் வரும் ஒரு வளைவு வரை மென்நடை போட்டபடி சென்று விட்டு, திரும்பி சாலையின் மற்றொரு முடிவு வளைவுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஏதோ ஓர் உணர்வு எமை தாக்க சடாரென பின்பக்கம் திரும்பினேன்.
அப்பொழுது எம் பின்னே மிக நெருக்கமான நிலையில் ஒரு பெண்ணுருவம் இருப்பதையும், யான் திரும்பியபோது இரண்டு ஊன்றுகோல்களை பிடித்து நடந்துக் கொண்டிருந்த எம் கைகளில் வலது முட்டி ஒரு மென்மையான பகுதியில் மோதியதையும் உணர்ந்தேன். ஆனால் அப்பெண்ணோ எந்த ஒரு சலனமும் இல்லாமல் எமைத் தாண்டி சென்று விட, யாரிந்த பெண், இவ்வளவு நெருக்கமாக எமை பின்தொடர காரணமென்ன? எவ்வளவு தூரமாக தொடர்கிறாள்? எப்படி உணராமல் போனேன்? எப்பகுதியில் எமது முழங்கை மோதியிருக்கும்? என சில நொடிகள் சிந்தனையில் உறைந்து விட்டு, அட! அந்த பெண் எங்கே செல்கிறாள் என தெரிந்துக் கொள்வோமே என விரைந்தேன் அந்த வளைவுக்கு. அந்த சாலையும் நேரான சாலைதான். விளக்குகளோ குறைவு. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தேன். பார்வைக்கு எட்டியவரை அந்த பெண் கண்ணுக்கு புலப்படவில்லை. மீண்டும் பார்க்கவும் இல்லை.
Labels:
உரசிய பெண் பேய்!,
மறக்கவியலா நினைவுகள்.
Sunday, June 23, 2013
இன்று முதல் டிவிட்டரில்
ஏனிந்த "கொலவெறி "
ஓடிஸா நயாபள்ளி கிராமத்தில் 62 வயதான மனைவியை 100 துண்டு கூறுப்போட்ட ஓய்வு பெற்ற
இராணுவ டாக்டர் 72 வயதான சோம்நாத் .கைது
#
இச்செய்தியின் மூலம், இன்று முதல் டிவிட்டரில் நுழைந்திருக்கிறேன்.
#
இச்செய்தியின் மூலம், இன்று முதல் டிவிட்டரில் நுழைந்திருக்கிறேன்.
Friday, June 21, 2013
எமக்கு பிடிக்காத அருமையான பாடல்
வாலிப வயதில் பல பாடல்களை முழுமையாக பாடினாலும், ஒரு பாடலை விரும்பவும், பாடவும் மாட்டேன். அப்படி எமக்கு பிடிக்காத அருமையான பாடல் ஒன்று உண்டென்றால், "பணம் படைத்தவன்" படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடி நடித்த
'எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே இருப்பான்.
தனக்கொரு பாதை வகுக்காமல், தன் தலைவன் வழியிலே நடப்பான்.'
காரணம், ஒரு மாற்றுத்திறனாளியாய், படிப்பு மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் எம்மைப்போலவும், தனக்கொரு பாதையை வகுத்து அவன் ஒரு தலைவனாய் விளங்கும் நிலையை வளர்த்துக் கொள்ளாமல், வேறு ஒரு ஒருவரை தலைவனாய் ( தீயவனாய் இருந்து விட்டால்?) ஏற்று நடைபோடும் நிலை இருந்து விட்டால் என்ன செய்வது கருதியதால்,
இறைவனிடம் வேண்டிக் கொண்டேன், என்னைப்போல் ஒரு மகன் வேண்டாம் என்று. இறைவனும் அருளினான். ஆனால் வேண்டுதலோ நிறைவேறியது தவறாக, எனக்கொரு நல்ல அறிவுள்ள, திறமையான, தனித்தன்மை உடையவனாக எனக்கு ஒரு மகனைக் கொடு என விரிவாக கேட்பதற்கு பதிலாக, என்னைப்போல் ஒரு மகன் வேண்டாம் என்று சுருக்கமாக கேட்டதினால், ஓ மகன் வேண்டாமேனே கேட்பதாக நினைத்து ஆண் வாரிசையே எமக்கு, இறைவன் வழங்கவில்லை போலும்.
அது நீண்ட காலத்திற்கு பிறகு வேண்டுதலில் இருந்த குறை, எமக்கு புரிந்தது. பாடலில் இந்த இரு வரிகள் போக மற்றவை பிடிக்கிறது.
# கேட்பதாக இருப்பினும், சொல்வதாக இருப்பினும், இறைவனிடமும், யாரிடத்தும் சுருக்கமாக, தெளிவாக கேளுங்கள், பேசுங்கள்.
இனிய இரவு வணக்கம் நண்பர்களே.
https://www.youtube.com/watch?v=DGpjKCDashs
Labels:
எமக்கு பிடிக்காத அருமையான பாடல்
Subscribe to:
Posts (Atom)