Friday, June 21, 2013

எமக்கு பிடிக்காத அருமையான பாடல்



வாலிப வயதில் பல பாடல்களை முழுமையாக பாடினாலும், ஒரு பாடலை விரும்பவும், பாடவும் மாட்டேன். அப்படி எமக்கு பிடிக்காத அருமையான பாடல் ஒன்று உண்டென்றால், "பணம் படைத்தவன்" படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடி நடித்த
 'எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே இருப்பான்.
தனக்கொரு பாதை வகுக்காமல், தன் தலைவன் வழியிலே நடப்பான்.'

காரணம்,  ஒரு மாற்றுத்திறனாளியாய், படிப்பு மற்றும் திறமைகளை வளர்த்துக்  கொள்ளாமல் இருக்கும் எம்மைப்போலவும்,  தனக்கொரு பாதையை வகுத்து அவன் ஒரு தலைவனாய் விளங்கும் நிலையை வளர்த்துக் கொள்ளாமல், வேறு ஒரு ஒருவரை தலைவனாய் ( தீயவனாய் இருந்து விட்டால்?) ஏற்று நடைபோடும் நிலை இருந்து விட்டால் என்ன செய்வது கருதியதால், 
இறைவனிடம் வேண்டிக் கொண்டேன், என்னைப்போல் ஒரு மகன் வேண்டாம் என்று. இறைவனும் அருளினான். ஆனால் வேண்டுதலோ நிறைவேறியது தவறாக, எனக்கொரு நல்ல அறிவுள்ள, திறமையான, தனித்தன்மை உடையவனாக எனக்கு ஒரு மகனைக் கொடு என விரிவாக கேட்பதற்கு பதிலாக,   என்னைப்போல் ஒரு மகன் வேண்டாம் என்று சுருக்கமாக கேட்டதினால், ஓ மகன் வேண்டாமேனே கேட்பதாக நினைத்து ஆண் வாரிசையே எமக்கு, இறைவன் வழங்கவில்லை போலும்.

அது நீண்ட காலத்திற்கு பிறகு வேண்டுதலில் இருந்த குறை, எமக்கு புரிந்தது. பாடலில் இந்த இரு வரிகள் போக மற்றவை பிடிக்கிறது.

# கேட்பதாக இருப்பினும், சொல்வதாக இருப்பினும், இறைவனிடமும், யாரிடத்தும் சுருக்கமாக, தெளிவாக கேளுங்கள், பேசுங்கள்.
இனிய இரவு வணக்கம் நண்பர்களே.



https://www.youtube.com/watch?v=DGpjKCDashs


No comments: