Monday, December 24, 2012

அனுபவங்கள் பல.- 1

அனுபவங்கள் பல. 1

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

இரண்டு கிருத்துவ நபர்கள் தனித்தனி குழுவாக இயங்கிக் கொண்டு, பலரை ஆசைக் காட்டி, ஏமாற்றி பொருள் பறித்து வந்தனர். ஒரு நாள் அவர்களிடம் ஒரு நாள் நீங்கள் வணங்குகின்ற கடவுள் உங்களை தண்டிப்பார் என கூறியதற்கு, அவர்கள் ஏளனப்புன்னகை செய்தவாறே, உங்கள் கடவுள்கள் தான் தண்டிப்பார்கள். எங்கள் கடவுள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர். அவர் சிலுவையில் அறைப்பட காரணமான காட்டிக் கொடுத்த யூதாசையே மன்னித்தவர். இச்சிறு குற்றங்களை செய்யும் எங்களையா தண்டிக்கப் போகிறார்? ஒரு வேலை எங்களுக்கு தாங்கமுடியா சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் வந்தால், ஆண்டவரிடம் பாவமன்னிப்புக் கேட்டால், அனைத்தையும் மன்னித்து சுகவாழ்வு கொடுப்பார் என்றனர். அப்படி நீங்கள் நினைக்கிறீர்களா கிருத்துவ நண்பர்களே?



மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும், நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கு கொடுக்க வேண்டும் - இயேசுநாதர்.


http://www.facebook.com/photo.php?fbid=515118625194451&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater




  • J.v. Raj Happy christmas ayya.
    19 hours ago · Unlike · 1
  • Dhavappudhalvan Badrinarayanan A Mதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    19 hours ago · Like · 1
  • Vanaja Velaayuthampillai ஜேசு எதையும் எழுத்தில் எழுதவில்லை ஆனால் 
    அவரது நண்பர்கள் அவரது வாழ்வில் நடந்த விடையங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினார்கள். தண்டனை பற்றி பழைய ஏற்பாடு கூறியது. மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் அது சொல்லப் பட்டது. இயேசு காலத்தில் உளவியற் புரட்சி. 
    மன 
    ...See More
    18 hours ago · Unlike · 1
  • Dhavappudhalvan Badrinarayanan A M @ Vanaja Velaayuthampillai:- ///ஜேசு எதையும் எழுத்தில் எழுதவில்லை ஆனால் 
    அவரது நண்பர்கள் அவரது வாழ்வில் நடந்த விடையங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினார்கள். தண்டனை பற்றி பழைய ஏற்பாடு கூறியது. மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் அது சொல்லப் பட்டது. இயே
    ...See More

அனுபவங்கள் பல.2

அனுபவங்கள் பல.2

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.


சென்ற வருடம் கிறிஸ்மஸ் நாளன்று நள்ளிரவு, வெளியூரிலிருந்து வந்துக் கொண்டிருந்த குடும்ப உருப்பினரை, வீட்டுக்கு அழைத்து செல்ல ஒரு பேருந்து நிறுத்த்த்திற்கு வந்து காத்திருந்தேன். அருகில் ஆட்டோ நிறுத்தத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுனர் கிருத்துவ மதத்தை சார்ந்தவரைக் கண்டதும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

நான் காத்திருந்த போது அமைதியாக இருந்தவர். நான் வாழ்த்து கூறிய சில நொடிகளில், எங்கள் ஆண்டவர் தான் உலகிலேயே சிறந்தவர். அவருக்கு இணையானவர் யாருமேயில்லை. நீங்கள் பல கடவுள்களை, பார்ப்பவை எல்லவற்றையும் வணங்குகிறீர்கள், பல கடவுள் புத்தகங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படியில்லை. அவர் ஒருவரை மட்டுமே வணங்குகிறோம், பைபிள் ஒரு புத்தகம் மட்டுமே என்றதுடன், அங்கிருந்தவர்களின் எந்த கூற்றையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.

சிறிது நேரம் பொருத்து பார்த்த நான், குரலை சற்று உயர்த்தி, ஐயா ஒரு நிமிடம் என்று சொல்லி அவர் பேச்சை தடுத்து நிறுத்தி விட்டு, எங்களுக்கு கடவுள்களும், புத்தகங்களும் அதிகம், முழுமையும் படிப்பதும் ஞாபகம் வைத்துக் கொள்வதும் சிரமம் தான். ஆனால் உங்கள் ஆண்டவர், மற்றவர் மனம் புண் படும்படி பேச சொன்னார? மதிக்க வேண்டாம் என்ற் சொன்னாரா? நான் வாழ்த்து தெரிவித்த்தற்கு, மறு வாழ்த்தோ, மகிழ்ச்சியோ, நன்றியோ தெரிவித்து இருக்க வேண்டும். அதை விடுத்து பேசுகிற இடத்தில் எல்லாம், பிரச்சாரம் செய்ய சொன்னாரா? ஒரே புத்தகமான பைபிளை முழுமையாக
வாசித்திருக்கிறீர்களா? என்றதும் வாய் மூடியவர் நான் அங்கிருந்து கிளம்பும் வரை வாயை திறக்கவே இல்லை.


நீ, உனக்கு பிறர் எதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதையே நீ பிறருக்கு செய். - இயேசுநாதர்


http://www.facebook.com/photo.php?fbid=515123065194007&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater

அனுபவங்கள் பல.3

அனுபவங்கள் பல.3

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

எங்கள் கடைக்கு கிருத்துவ மதத்தைத் தழுவிய சிங் (பஞ்சாப்காரர் ) வாடிக்கையாளராக இருந்தார். எங்கள் மீது மிகுந்த வாஞ்சைக் கொண்டவராக திகழ்ந்தார். ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகைத் தரும்போதெல்லாம், அவர் இல்லத்திற்கு அவசியம் வர வேண்டும் என அழைப்பு விடுப்பார். 

அவரின் அழைப்பை தவிற்க இயலாமல், எங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்து விட்டு, அவர் இல்லத்திற்கு சென்றோம். எங்களை குடும்பத்துடன் வரவேற்றார்கள். நலன் விசாரிப்புகள் தொடர்ந்துக் கொண்டிருந்த போதே, எங்கள் வேண்டுகோளையும் புறந்தள்ளி, பஞ்சாப் மாநில இனிப்பு கார வகைகளையும், பழரசத்தையும் பரிமாறினார்கள். ருசி பார்த்து விட்டு, புறப்பட எண்ணிய போது, சிறிது நேரம் அமருங்கள், உங்களுக்காக எங்கள் ஆண்டவரிடம் பிராத்திக்கிறோம் என்றார்கள். அவர்கள் அன்பினை மீறமுடியாமல், ஏற்றுக் கொண்டோம்.

அவரும் அவர் மனைவியும் எங்கள் இருவரின் தலை மீது கைகளை வைத்தபடி, வாயிக்குள் மெதுவாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவர்கள், நேரம் செல்ல செல்ல, உச்ச ஒலியில் அவர்களின் உடல் முழுமையும் ஆட, ( சாமி வந்து ஆடுவது போல ) மிக மிக வேகமாக பிரார்த்தனை செய்தார்கள். சிறிது சிறிதாக வேகம் குறைந்து, சகஜமான நிலைக்கு வந்து, சிறிது நேரம் கழித்து பின் விடைப் பெற்று கிளம்பும் போதும், வரவேற்றது போலவே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

வாழ்விலே மறக்க முடியாத சம்பவமும், குடும்பமும் ஆகும்.


எவன் சிறுகுழந்தையைப் போல பணிவுடையவனோ, அவனே பரலோகத்தில் பெரியவனாக மதிக்கப் பெறுவான் - இயேசுநாதர்