Monday, December 24, 2012

அனுபவங்கள் பல.2

அனுபவங்கள் பல.2

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.


சென்ற வருடம் கிறிஸ்மஸ் நாளன்று நள்ளிரவு, வெளியூரிலிருந்து வந்துக் கொண்டிருந்த குடும்ப உருப்பினரை, வீட்டுக்கு அழைத்து செல்ல ஒரு பேருந்து நிறுத்த்த்திற்கு வந்து காத்திருந்தேன். அருகில் ஆட்டோ நிறுத்தத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுனர் கிருத்துவ மதத்தை சார்ந்தவரைக் கண்டதும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

நான் காத்திருந்த போது அமைதியாக இருந்தவர். நான் வாழ்த்து கூறிய சில நொடிகளில், எங்கள் ஆண்டவர் தான் உலகிலேயே சிறந்தவர். அவருக்கு இணையானவர் யாருமேயில்லை. நீங்கள் பல கடவுள்களை, பார்ப்பவை எல்லவற்றையும் வணங்குகிறீர்கள், பல கடவுள் புத்தகங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படியில்லை. அவர் ஒருவரை மட்டுமே வணங்குகிறோம், பைபிள் ஒரு புத்தகம் மட்டுமே என்றதுடன், அங்கிருந்தவர்களின் எந்த கூற்றையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.

சிறிது நேரம் பொருத்து பார்த்த நான், குரலை சற்று உயர்த்தி, ஐயா ஒரு நிமிடம் என்று சொல்லி அவர் பேச்சை தடுத்து நிறுத்தி விட்டு, எங்களுக்கு கடவுள்களும், புத்தகங்களும் அதிகம், முழுமையும் படிப்பதும் ஞாபகம் வைத்துக் கொள்வதும் சிரமம் தான். ஆனால் உங்கள் ஆண்டவர், மற்றவர் மனம் புண் படும்படி பேச சொன்னார? மதிக்க வேண்டாம் என்ற் சொன்னாரா? நான் வாழ்த்து தெரிவித்த்தற்கு, மறு வாழ்த்தோ, மகிழ்ச்சியோ, நன்றியோ தெரிவித்து இருக்க வேண்டும். அதை விடுத்து பேசுகிற இடத்தில் எல்லாம், பிரச்சாரம் செய்ய சொன்னாரா? ஒரே புத்தகமான பைபிளை முழுமையாக
வாசித்திருக்கிறீர்களா? என்றதும் வாய் மூடியவர் நான் அங்கிருந்து கிளம்பும் வரை வாயை திறக்கவே இல்லை.


நீ, உனக்கு பிறர் எதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதையே நீ பிறருக்கு செய். - இயேசுநாதர்


http://www.facebook.com/photo.php?fbid=515123065194007&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater

No comments: