Sunday, July 21, 2013

மிக நீண்........ட வருடங்களுக்கு பின்

மிக நீண்........ட வருடங்களுக்கு பின் ஆடிப்பிறப்பை முன்னிட்டு, எங்கள் இல்லத்தில் தேங்காய் சுடப்பட்டது.
இறைவனுக்கு படைப்பது போல், உங்களுக்கு இது...
கண்ணு வைக்காதிங்க, வயிறு வலிக்கும். ஹா... ஹா... ஹா...


Wednesday, July 17, 2013

ஆடிப்பிறப்பு

மிக நீண்........ட வருடங்களுக்கு பின் ஆடிப்பிறப்பை முன்னிட்டு, எங்கள் இல்லத்தில் தேங்காய் சுடப்பட்டது.
இறைவனுக்கு படைப்பது போல், உங்களுக்கு இது...
கண்ணு வைக்காதிங்க, வயிறு வலிக்கும். ஹா... ஹா... ஹா... 




Photo: மிக நீண்........ட வருடங்களுக்கு பின் ஆடிப்பிறப்பை முன்னிட்டு, எங்கள் இல்லத்தில் தேங்காய் சுடப்பட்டது.
 இறைவனுக்கு படைப்பது போல், உங்களுக்கு இது...
கண்ணு வைக்காதிங்க, வயிறு வலிக்கும். ஹா... ஹா... ஹா... 

Monday, July 15, 2013

ஆனந்தம் - இன்றொரு தகவல்.



நேற்று ஒரு இடத்திற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும்போது, ஒரு சாலை சந்திப்பில் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது திடிரென்று ஒருவர் சாலையைக் கடந்து, ஐயா நலமா என கேட்டார். சில நொடிகளில் அவரை நினைவிற்கு கொண்டு வந்து, இப்பொழுது தான் நீங்கள் நல்ல தோற்றத்துடன் இருக்கிறீர்கள் என்றேன்.

அவரும்,, தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. குடியை நிறுத்தி விட்டேன் என்றார். சிக்னல் கிடைக்க மீண்டும் பார்ப்போமென மகிழ்வுடன் விடைப்பெற்று கொண்டோம். நினைவுகள் பின்னோக்கி ஓடியது. யான் எப்பொழுதும் தனியாக வண்டியில் பயணம் செய்யும் போதும் (அவசிய பணிகள் இல்லாத சமயங்களில்) பேருந்துக்காக தனியாக காத்திருக்கும் நபர்களை, யான் செல்லவிருக்கும் இடத்திற்கு இடைப்பட்ட இடமாக இருப்பின் இலவசமாக அழைத்து சென்று உதவுவது என குறிக்கோளாக செயல்பட்டு வருகிறோம். அதுபோல சில மாதங்களுக்கு முன் இவரையும் இப்படி அழைத்து சென்றோம். அழுக்கு உடையுடனும், போதையிலும் இருந்தார்.

அவர் கீழே விழுந்து விடுவாரோ என்ற நினைப்பிலும், அவரிடம் பேசவும் மெதுவாக வண்டியை இயக்கியபடி பேச்சுக் கொடுத்து, அவர் கட்டிட மேஸ்திரி என்பதையும், வீடு இல்லா நிலையையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்துக் கொண்டோம். குடியை நிறுத்த வேண்டிய அவசியத்தையும், பணியில் அவரைப் போன்றவர்களின் செயல்பாடுகளையும் விளக்கி, மீண்டும் எம்மை எங்கு சந்தித்தாலும் நீங்களாக பேசுங்கள் என அறிவுரைக் கூறி அனுப்பினேன்.

நேற்று எம்மை, எதிர்பாராத வகையில் மீண்டும் அவராக வந்து சாலை சந்திப்பில் பேசியதுடன், போதையில் இல்லாமலும், நல்ல உடையுடன் காண நேர்ந்ததும், எமது பிரச்சாரத்தினால் இவரை போதைப் பிடியிலிருந்து மீட்க முடிந்ததே என்ற மகிழ்வுடன் ஒரு உத்வேகமும் ஏற்பட்டது.


# # குடி குடும்பத்தை அழிப்பதுடன், உங்கள் கௌரவத்தையும் (மரியாதையையும்) அழித்து விடும்.


இனிய மாலை வணக்கம் நண்பர்களே!


Friday, July 5, 2013

இன்றொரு தகவல்

இளவரசன் (திவ்யா) ரயில் முன் விழுந்து தற்கொலை. - இன்றொரு தகவல்









விபரம் தெரியாமல் விவரிக்க இயலாது இதை. ஆனால் மற்றொரு தகவல் உங்களுக்கு.

காதலித்த பையனும், பெண்ணும்  ஒரு சாதி மக்களே, பையன் அரசு வேளையில்  இருப்பினும் பெண்ணின் பெற்றோர் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, பஸ்ஸில் ஏற, அவளுக்காக காத்திருந்த பையனும் மற்றவர்கள் உணராத வகையில்
வேகமெடுத்த பஸ்ஸில்
ஓடி வந்து ஏற,
கை பிடியோ நழுவ,
கீழே விழுந்தான்.
பஸ்சின் பின் சக்கரங்கள்
கை மேல் ஏற,
துண்டானது கை.

பஸ்ஸில் இருந்த பெண்ணை, பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். புது காரணமும் ஒன்று கிடைத்தது. அரசு வேலையும் கையிழந்ததால் போய் விட்டது. கையும் வேலையும் இல்லாத  முடவனுக்கு பெண் தரமாட்டோம். பஞ்சாயத்தார் திரும்பினர் வெறும் கையுடன்.


பெண்ணோ!
காதல் தோல்வியால் கதவை தாளிட்டாள்.
கையிற்றை மாட்டினாள் கழுத்துக்கு,
பறந்தது உயிர் விண்ணுக்கு.

இன்று கதறுகின்றனர் ஒரே ஒரு வாரிசைப் பெற்ற அப்பெற்றோர்.
"அந்த பையனுக்ககே  மனம் முடித்திருந்தால்,

பேசா விட்டால் கூட,
கண்களிலாவது பார்த்துக் கொண்டிருப்போமே,
இத்தனை நாள் கஷ்டப்பட்டு வளர்த்த பாசமகளை. "

*யான் என்ன சொல்ல அவர்களுக்கு ஆறுதலாய்?


# கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இது தானோ?

Monday, July 1, 2013

மருத்துவர்கள் (டாக்டர்கள் ) தின வாழ்த்துக்கள்....



எங்கள் ஊரிலிருந்து நகரத்திற்கு குடி பெயரும் வரை, எங்கள் குடும்ப மருத்துவராக இருந்த
தருமபுரி மாவட்டம்  பொம்மிடியில்  Dr. முனிரத்தினம் M.B.B.S. அவர்களுக்கும்,

அதே ஊரில்  Dr.ரங்கநாதன்  M.B.B.S. அவர்களுக்கும்,

சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு மருத்துவ சிகிச்சை அளித்த கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் இயற்கை மருத்துவம் மேற்கொண்ட மருத்துவருக்கும், சென்னையில் அடையார் ஆந்திர மகிள சபா ஈஸ்வர் பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனை Dr.நடராஜன் அவர்களுக்கும்,

எமக்கு வாலிப வயதில் ஏற்பட்ட பெரும்  சளி தொல்லையிலிருந்து முதல் முறையாக முழுமையாக எம்மை விடுவித்த ஹோமியோபதி மருத்துவர் ( பெருத்த அனுபவமும் வயதும் முதிர்ந்தவர். பெயர் தெரியாது.  இயற்கை அடைந்து விட்டார், சேலம் டவுன் மணிகூண்டு கட்டிடத்தில் மருத்துவமனை வைத்திருந்தார். அந்த பழமையான வரலாறு சிறப்புமிக்க கட்டிடம், தற்போது இடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது- கொசுறு செய்தி.)

சென்னையில் அமைந்தகரை மேத்தா நகரில் எங்கள் குடும்ப மருத்துவராக இருந்த Dr. சுந்தரேசன் M.B.B.S. அவர்களுக்கும்,

 சென்னையில் எமக்கு முதுகு தண்டுவட எழும்பு சிகிச்சை அளித்த Dr.A.B.கோவிந்தராஜ் FRCS., Senior Consultant - Orthopaedics - Traumatology (Orthopetic
Surgeon ) அவர்களுக்கும்,

சென்னையில் நரம்பு தளர்ச்சி நோயிக்காக சிகிச்சை அளித்த Dr.R.பழனி M.D (Gen.Med), DM (Neuro), MRCP (UK)., Consultant neurologist, Neurointensivist & Neurophysiologist அவர்களுக்கும்,

 எம் வாழ்வு புவியில் தொடர, எமக்கு ஏற்பட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் இன்றைய "மருத்துவர்கள் தினத்தில்" எமது இதயங்கனிந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.