Saturday, July 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-8

நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள்

1) நான் 6 பெண்மகவுகளுக்கு பிறந்ததாலும்,
2) பிறக்கும் போதே சுருட்டை முடியுடனும் கொழுக்கொழுவென்று இருந்ததாலும்
3) வீட்டில் உள்ளவர்களும்
4) கிராமத்தைச் சேர்ந்தவர்களும்
5) வணிக சம்பந்தமாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வருபவர்களும்
கொஞ்சி, கொஞ்சி மகிழ, நானும் செழிப்பாக வளர்ந்தேன் 5 வயது வரை. இதிலே சில சொல்லக் கேட்டவை, சில நினைவிலே உள்ளவை. எங்கள் குடும்பமும், பெரியப்பா குடும்பமும் பெரிய கூட்டுக்குடும்பமாக இருந்ததால், என்னை விட 1 1/2 வயதே பெரியவரான எனது சகோதரன். ரமேஷ் பாபு (பெரியப்பாவின் மகன்), நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, எனது தம்பி,எனது தம்பி என்றும், எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று என்னையே சுற்றிக் கொண்டும், தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டும் அலைவாராம். எங்கள் பெரிய அண்ணியார்.Late.திருமதி. கோகிலா அவர்களின் திருமணத்திற்கு( பெரியப்பாவின் பெரிய, முதல் மருமகள் ) பிறகு தான் நான் பிறந்ததாலும், என்னை கொழுந்தினார் என்றுதான் அழைப்பார்கள். அவரின் கடைசி கொழுந்தனாரான ரமேஷ் பாபுவிடம், சின்ன கொழுந்தினாரே... 'குட்டி கொழுந்தினாரை' ( அதாவது என்னைத் தான்) கீழே போட்டுவிடாதீர்கள், என்று பதறுவார்களாம். எவ்வளவுதான் எல்லோரும் என்னைத் தூக்கிக் கொஞ்சினாலும், முறைப்படி குப்புற விழ, தவழ, தட்டுத்தடுமாறி கிழே விழுந்து எழுந்து நடக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். மிக விரைவிலே எழுந்து நடந்த நான், 1.1\2 வயதிலே 3 வயது பையன் போல் இருந்துள்ளேன். நடக்க ஆரம்பித்தபின் நடந்த சொல்ல கேட்ட, நினைவிலுள்ள சில........

6 comments:

Anonymous said...

:) i guess you were a cute baby

Dhavappudhalvan said...

//தூயா said...
:) i guess you were a cute baby \\

ஆமாம். இப்பொழுது அல்ல, எனென்றால்????.......

நான் தான் பெரியவன் ஆகிவிட்டேனே!

Dhavappudhalvan said...

கடைசியிலே 2 எழுத்து விட்டுடேனுங்க. வேறவொன்னுமில்லே.''ஹி..ஹி...'' தான்.

Jeevan said...

It’s a sweet memory! If we have any elder siblings, they give more importance to take care of us, like how i used to do my cousin bro. I would be around him and adoring his movements.

Dhavappudhalvan said...

ஜீவனு(ள்)ள மகிழ்ச்சி, கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

c g balu said...

cute baby பதிவுக்குத்தான் எவ்வளவு விமர்சனங்கள்