Monday, October 14, 2013

அனுபவங்கள் ,பல



 

ஒரு வழியாக பேபி வீல்சேர் வந்தது. அதில் மிகவும் குறுகி அமர்ந்து என் ஊன்று கோல்களையும் கையில் பிடித்துக் கொண்டு தண்டவாளங்களையும்  பிளாட்பாரங்களிலிருந்த மேடு பள்ளங்களை கடந்து நான் ஏற வேண்டிய ரயில் பெட்டியை வந்தடைந்தேன். என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்த இரயில் நிலைய ஊழியரை சும்மா அனுப்ப மனம் வரவில்லை. பணம் கொடுத்ததற்கு வேண்டாமென மறுத்தவருக்கும் வலுகட்டாயமாக கையில் திணித்து அனுப்பி வைத்தோம். என்ன குரங்கு மனமடா! இலவசமாக செய்ய வேண்டியதற்கு யாராவது பணம் கேட்டால் கோபம் வருகிறது. வேண்டாமென்பவருக்கு கையில் திணித்து அனுப்புகிறோம். விடியற்காலை 4,30 மணி சுமாருக்கு ஆத்தூர் சென்றடைந்துவிடுமென்றதால், இரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்ற பிறகு எங்கே தூக்கம். அறைகுறை தான். அன்று திருமணநாளாக இருந்ததால், நான் இருந்த பெட்டியில் பாதி பேர்  ஆத்தூரில் இறங்குபவர்களாக இருந்தார்கள். இரயில் சரியாக எத்தனை மணிக்கு சேருமென தெரியாததால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வாசற்படியில் திபுதிபுவென கூட்டம். ரயில் தாமதமானதாலும், சிறிய நிலையங்களில் போதுமான வெளிச்சத்துடன் பெயர் பலகைகள் இல்லாததாலும் தடுமாறினார்கள். ஊர் வந்ததும், பிளாட்பாரத்தின் கடைசியில் நாங்கள் இறங்கவேண்டிய பெட்டி இருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் தான் ஆத்தூர் லன்யஸ் கிளப் மூலமாக வீல்சேர் ஒன்றை இரயில் நிலையத்திற்கு நன்கொடை அளித்திருந்ததால் எனக்கு மிக்க வசதியாக அமைந்தது.சென்னைக்கு திரும்பும்போது நாங்கள் ஏறவேண்டிய  இரயில் பெட்டி நிற்குமிடத்தை கேட்டு அந்த இடத்தில் ( பிளாட்பாரத்தில் ) இறங்கிக் கொண்டு வீல்சேரை வேறு யாருக்காவது தேவைப்படுமென அனுப்பி வைத்து விட்டேன். மீண்டும் சோதனை இரயில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் முன்னோக்கி சென்று விட்டதுடன் பிளாட்பாரம் தாழ்வாக இருந்ததால் கீழ்யிருந்து இரண்டு  மூன்று பேர் தூக்கிவிட, பெட்டியினுள்ளிருந்து இரண்டு  மூன்று பேர் மூட்டைப் போல் என்னை இழுத்து ஏற்றி விட்டார்கள்.  சென்னை வந்ததும் பழைய நிலைபடியே சிரமப்பட்டு எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து வீடு வந்தடைந்தேன். அடுத்தது மறக்க முடியா ஏப்ரல் மாத நிகழ்சியை அடுத்து பார்ப்போமா...

மறக்க முடிய நிகழ்ச்சி அனுபவங்கள் பல



 

 

சேலம் ஆத்துரில் வசிக்கின்ற எனது நான்காவது சகோதரி ஸ்ரீமதி.பிரபாவதி, தாய் மாமா மகன் திரு.ஜெனார்தனம் அவர்களின் மகனான திருநிறைச்செல்வன்.பிரசன்னகுமார் திருமணத்திற்கு 2009 ஜனவரி 30 ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஆத்துர் சென்றடைந்து, 2009 பிப்ரவரி 2 ஆம் தேதி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் வித்தியாசமான,சிரமம் நிறைந்த பயணமாக அமைந்தது.
 
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அங்கு போனதும் காத்திருந்தது முதல் இடி, மூன்று நான்கு பிளாட்பாரங்களை தாண்டி ரயில்  ஏழாவது பிளாட்பாரத்தில் நிற்பது. அடுத்ததாய் அங்கு போவதற்கு வீல்சேர் கிடைக்கவில்லை, ஒரு வழியாய் பேட்டரிகார் வந்தது, ஆஹா என மிக்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்து சென்றால், ரயில் இருக்குமிடத்திற்கு எதிர்திசையில், சரக்கு டிராலிகள் தண்டவாளங்களுக்கு குறுக்கே அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்லும் வழியாக நடந்து சென்று விடுங்களென பிளாட்பாரம் கடைசியில் யாருமில்லா இடத்தில் இறக்கி விட்டு, தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சத்தை காட்டி, அதுதான் ரயிலென  பேட்டரிகார் ஓட்டுனர் சொல்ல அதிர்ந்து விட்டேன்.
 
ஒரு 50 அடி, 100 அடி நடப்பதற்கு கூட சிரமமாக உள்ள நிலையில், சரக்கு ஏற்றி செல்லும் டிராலி கிடைத்தால்கூட போதும் ஏற்பாடு செய்ய கேட்டேன். இலவச பயண பேட்டரிகாருக்கு ஒரு துகையையும் பெற்று கொண்டு, பார்த்து அனுப்புகிறெனென சென்றவர்தான். நேரமோ கடந்துக் கொண்டிருக்க, டிராலியோ வீல்சேரோ வருவதற்குறிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

 

எங்கள் மகள் விரைந்து சென்று யாரிடமோ கேட்டு, வீல்சேருடன் இரயில் நிலைய ஊழியரையும் அழைத்து வந்தார். மீண்டும் அதிர்ந்தோம் வீல்சேரைக் கண்டு. ஆம், அது குழந்தைகளை அழைத்து செல்லத்தக்க வகையில் மிக சிறியதாக இருந்த்து. கேட்ட்தற்கு வேறு கிடைக்கவில்லை. அதனால்தான் இது என அறிந்து, அப்படியிப்படியென குறுகி அமர்ந்து, ஒரு வழியாக புகை வண்டியில் ஏறியமர்ந்தோம். திரும்பி வந்த போதும் சிரமப்பட்டோம்.

அதனால் அன்றிலிருந்து குடும்பத்துடன் சேர்ந்து பயணம் மேற்கொள்ளவதை குறைத்துக் கொண்டு  விட்டோம்.

 

அனுபவங்கள் பல


எதேதோ எப்படி எப்படியோ எழுத நினைக்கிறேன். அதனால் சில விசயங்கள் விடுபட்டு விடுமோ என்ற ஒரு கலக்கமும் தோன்றுகிறது. ஆமாம் பெரிய சரித்திர சம்பவங்கள், விடுபட்டு விட்டால் பிற்கால சந்ததியருக்கு முழுமையான சரித்திரம் தெரியாமல் போய்விடும்பார் என நீங்கள் கிண்டல் அடிப்பதும் உணர்கின்றேன். ஆனாலும் என்ன செய்ய, எழுதவும் துவங்கி விட்டேனே, உங்களை படிக்கவும் செய்து விட்டேன். எல்லாம் நம் தலையெழுத்து. சரி சொல்ல வந்ததுக்கு போவோமா? இப்பொழுதுதான் உயர்னிலைப்பள்ளி  வாழ்க்கை நிலைக்கே எழுத வந்திருக்கிறேன். இதற்குபின் கல்லூரி, திருமணம், தொழில் இப்படி எழுத நீண்டுக் கொண்டே போகும் இந்த நேரத்தில், சமிபத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் மறந்து விடுமோ என்ற எண்ணம் எற்ப்பட்டதால், அவ்வப்போது இந்த வருட நிகழ்ச்சிகளையும் எழுத நினைத்துவிட்டேன்.

 

ஆஹா, 2009 ம் வருடம் பிறக்கப் போகிறது, டைரி எழுத ஆரம்பித்து விட வேண்டுமென நினைத்தபடி, புத்தாண்டும் பிறந்தது,  பொங்கல் நெருங்குகிற நேரத்தில் நண்பர் சரவனன் ஒரு டைரியை பரிசளித்தார். அவருடைய நினைவு இருக்க, அதில் ஆட்டோகிராப் கேட்டேன். தேவையில்லையென அவர் மறுக்க, நானோ பிடிவாதமாய் இன்று இல்லாவிடினும் பிறகு எழுதி கொண்டுவாருங்களென, டைரியை திருப்பி அவரிடமே கொடுத்து அனுப்பி விட்டேன். ஒரு மாதமாகியும் கொடுக்காததால், நானே கேட்டேன். வேறோரு நண்பருக்கு கொடுத்து விட்டேனென அப்பொழுது சொன்னார். டைரியும், எழுத நினைத்த என்னுடைய எண்ணமும் போனது போனதுதான். ஒரு வழியாக இந்த பதிவு முலமாகவே அவ்வப்போது பதித்து விடுவது என முடிவு செய்ததின் ஆரம்பம்தான் இது.
 
பால் பொங்கல், சக்கரைப்பொங்கல், வடை,அத்திரசம்,பாயாசம் செய்து ஒரு நாள் பொங்கல் கொண்டாடினோம். சென்னை மாநகருக்கு குடிபெயருவதற்கு முன், எங்கள் வீட்டில் நான்கு நாட்களும் பால் பொங்கலும் சக்கரை பொங்கலும் செய்வார்கள். திகட்ட திகட்ட சாப்பிடுவோம். ஆனால் இங்கு குழந்தைகளின் உணவு விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் ஒரு முறை மட்டுமே பொங்கலென ஆகிவிட்டது. முக்கியமான நிகழ்வுகளாக இந்த 2009 ஜனவரி கடைசியில் தான். அதை அடுத்ததில்.....
சென்ற பதிவிலே அறிவித்த மாணவபருவ விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஒருப் பக்கம் மனது துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. . பக்கத்து ஊர்களிலிருந்து வருகின்ற மாணவ மாணவியர் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்று வர முடியாத்தால் நானும் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவேன். அன்று ஒரு மாணவரின் ( பெயர் வேண்டாம். ஏனெனில் தற்போது அவர் வங்கி மேலாளராக பணிப்புரிகிறார் ) மதிய உணவை, பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர் வீரகேசவன் ( அமரர் ஆகி விட்டார் ) நண்பனுக்கு தெரியாதவாறு,வகுப்பிலே பாடம் நடந்துக் கொண்டிருக்கின்ற பொழுதே எடுத்து சாப்பிட்டு விட்டார். சில பல மாணவர்கள் மற்ற மாணவர்களின் உணவை எடுத்து ருசி பார்ப்பதும், டிபன் பாக்ஸை எடுத்து மறைத்து வைப்பதும் அடிக்கடி நடக்கும் விளையாட்டாகும். ஏனோ யாரும் என்னிடம் அது போல் விளையாடமாட்டார்கள். நானும் யாருடையதையும் எடுத்து சாப்பிட மாட்டேன். பிறகு மதிய உணவு சாப்பிட டிபன்பாக்ஸ் திறக்கும்போது தான் அவனுக்கு தெரிந்தது. அன்று அவர் பசி பட்டினியோடு இருந்த கோபம், மறுநாள் பலி வாங்கும் படலம் அரங்கேறியது. அன்றும் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே, உணவை பறிகொடுத்த மாணவர், தன் உணவை சாப்பிட்டு விட்ட மாணவரின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, ஓஹோ,, ஏதோ தரப்போகிறார் என நினைத்து, பாடம் நடத்து ஆசிரியரை பார்த்தவறே கையை நிட்ட, மற்றொரு கையையும் இழுத்து சேர்த்து வைக்க ஓ.. நிறைய ஏதோ கொடுக்க போகிறான் என நினைத்துக் கொண்டு, கைகளை சேர்த்து நீட்ட, நாடகம் அரங்கேறியது. அப்பொழுது மாணவர்கள் 11 ஆம் வகுப்பு வரை அரைக்கால் சட்டை ( ட்ரவுசர் ) தான் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அதுவும் காக்கி யூனிபாரம். அதனால் மிக வசதியாக அமர்ந்த நிலையிலேயே, அவனின் கைகளில் சிறுநீர் கழித்து விட்டான். பாடம் கவணித்துக் கொண்டே கைகளை நீட்டிய அவனுக்கு சில நொடி கழிந்த பின் தான் கையில் ஈரத்தன்மையை உணர்ந்து பார்க்கையில் தான், இவருடைய செயல் தெரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக, ஆசிரியருக்கு தெரியாமல் மறைக்கவும், கைகளிலிருக்கும் சிறுநீரை எங்கே கொட்டுவது என தெரியாமல் தடுமாறினான். பெஞ்சுக்கு கீழேயே ஊற்றி விட்டான். வகுப்பாசிரியர் வெளியேறியதும், விபரமறிந்த வகுப்பறையே சிரிப்பலையிலும், கேலியிலும் அதிர்ந்ததை சொல்லத் தேவையில்லை.


சென்னையிலிருந்து இங்கு வந்த பிறகு முதன்முறையாக என்னை அறியாமலே வம்பில் மாட்டிக் கொண்ட நிகழ்ச்சியை அடுத்து பார்ப்போமா!

இன்றொரு தகவல். - மகிழ்வான நாளிது.



இனிய மதிய வணக்கம் நண்பர்களே!

இன்றைய நாள் வாழ்விலே மகிழ்வான ஒரு நாளாகும். ஆம். காலை சிற்றுண்டிக்காக சிற்றுண்டி சாலைக்கு சென்றோம். அங்கு ஒரு பெண்மணி, எமைக் கண்டதும், எமது பெயரையும், பிறந்த ஊரையும் கூறி, சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டார். எமது எண்ணங்களோ வேகம் பிடிக்க, எங்கோ பார்த்த முகமாக தெரிகிறது, ஆனால் அகப்படவில்லை நினைவு நூலிழைகள்.

உங்களை பார்த்த முகமாக தோன்றினும், நினைவுக்கு வரவில்லையே என்றோம். எமது உயர்நிலைப்பள்ளி வகுப்புத்தோழர் வள்ளி செட்டியின் தங்கை என அறிந்ததும், எமது நண்பரையே நேரில் கண்டது போல் மனம் சிலிர்த்ததை சொல்லவும் தேவையில்லை.

இளங்காலை வெயிலில் இருந்தபடியே சில நிமிடங்கள்  அளவுலாவிக் கொண்டிருந்த நேரத்திலேயே, நண்பருக்கும் அலைப்பேசியில் அழைப்பு விடுத்து எம்மிடம் கொடுக்க, மகிழ்வுகளை பரிமாறிக் கொண்டோம்.

அம்மகிழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இப்பதிவிது.





Saturday, October 12, 2013

நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும்,
சரஸ்வதி  பூசை,
ஆயுத பூசை
திருநாள் நல்வாழ்த்துக்கள்.