Monday, October 14, 2013

சென்ற பதிவிலே அறிவித்த மாணவபருவ விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஒருப் பக்கம் மனது துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. . பக்கத்து ஊர்களிலிருந்து வருகின்ற மாணவ மாணவியர் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்று வர முடியாத்தால் நானும் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவேன். அன்று ஒரு மாணவரின் ( பெயர் வேண்டாம். ஏனெனில் தற்போது அவர் வங்கி மேலாளராக பணிப்புரிகிறார் ) மதிய உணவை, பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர் வீரகேசவன் ( அமரர் ஆகி விட்டார் ) நண்பனுக்கு தெரியாதவாறு,வகுப்பிலே பாடம் நடந்துக் கொண்டிருக்கின்ற பொழுதே எடுத்து சாப்பிட்டு விட்டார். சில பல மாணவர்கள் மற்ற மாணவர்களின் உணவை எடுத்து ருசி பார்ப்பதும், டிபன் பாக்ஸை எடுத்து மறைத்து வைப்பதும் அடிக்கடி நடக்கும் விளையாட்டாகும். ஏனோ யாரும் என்னிடம் அது போல் விளையாடமாட்டார்கள். நானும் யாருடையதையும் எடுத்து சாப்பிட மாட்டேன். பிறகு மதிய உணவு சாப்பிட டிபன்பாக்ஸ் திறக்கும்போது தான் அவனுக்கு தெரிந்தது. அன்று அவர் பசி பட்டினியோடு இருந்த கோபம், மறுநாள் பலி வாங்கும் படலம் அரங்கேறியது. அன்றும் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே, உணவை பறிகொடுத்த மாணவர், தன் உணவை சாப்பிட்டு விட்ட மாணவரின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, ஓஹோ,, ஏதோ தரப்போகிறார் என நினைத்து, பாடம் நடத்து ஆசிரியரை பார்த்தவறே கையை நிட்ட, மற்றொரு கையையும் இழுத்து சேர்த்து வைக்க ஓ.. நிறைய ஏதோ கொடுக்க போகிறான் என நினைத்துக் கொண்டு, கைகளை சேர்த்து நீட்ட, நாடகம் அரங்கேறியது. அப்பொழுது மாணவர்கள் 11 ஆம் வகுப்பு வரை அரைக்கால் சட்டை ( ட்ரவுசர் ) தான் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அதுவும் காக்கி யூனிபாரம். அதனால் மிக வசதியாக அமர்ந்த நிலையிலேயே, அவனின் கைகளில் சிறுநீர் கழித்து விட்டான். பாடம் கவணித்துக் கொண்டே கைகளை நீட்டிய அவனுக்கு சில நொடி கழிந்த பின் தான் கையில் ஈரத்தன்மையை உணர்ந்து பார்க்கையில் தான், இவருடைய செயல் தெரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக, ஆசிரியருக்கு தெரியாமல் மறைக்கவும், கைகளிலிருக்கும் சிறுநீரை எங்கே கொட்டுவது என தெரியாமல் தடுமாறினான். பெஞ்சுக்கு கீழேயே ஊற்றி விட்டான். வகுப்பாசிரியர் வெளியேறியதும், விபரமறிந்த வகுப்பறையே சிரிப்பலையிலும், கேலியிலும் அதிர்ந்ததை சொல்லத் தேவையில்லை.


சென்னையிலிருந்து இங்கு வந்த பிறகு முதன்முறையாக என்னை அறியாமலே வம்பில் மாட்டிக் கொண்ட நிகழ்ச்சியை அடுத்து பார்ப்போமா!

No comments: