Thursday, December 11, 2008

எனக்கும்.....25

அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். ஒரு சமயம் சென்னையில் காய்ச்சல் பரவியிருந்தது, அது எங்கள் மருத்துவமனையிலிருந்த குழந்தைகளையும் தாக்கியது. அதில் அவனும் ஒருவன், அது ஒரு கோடைகாலமாக இருந்ததால்,அவனை ஆந்திராவிலிருந்து பார்க்க வந்த உறவினர் பங்கனபள்ளி மாம்பழங்களை வார்டனுக்குத் தெரியாதவாறு அவனிடம் கொடுத்தார். மாம்பழங்கள் ஓரிரு நாட்கள் கழித்து பழுக்க வேண்டிய நிலையிலிருந்ததால் பெட்டியில் வைத்து பூட்டி வைத்தான். அந்த ஓரிரு நாட்களில் அவனுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. பழங்கள் பழுத்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியாத சூழ்நிலை. அதனால் தினமும் ஏக்கத்துடன் பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு மூடிவைத்துக் கொள்வான். பழங்கள் கெட்டுபோகும் நிலையிலிருந்ததால், நான்அவனிடம் பழங்கள் கெட்டு விட்டால் யாருக்கும் உபயோகமின்றி போய்விடும். எனவே நண்பர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடு, உனக்கு உடல்நிலை சரியானதும் மீதி பழங்களை சாப்பிடுயென்று எவ்வளவோ கூறியும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. பழங்கள் ஒவ்வொன்றாக அழுக ஆரம்பித்தது. கெட்டுப்போன பழங்களை பார்த்து அழுதுக் கொண்டே, ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் போட்டான். அப்படி நாலைந்து பழங்கள் போட்டபிறகும், அவன் உடல்நிலை பூரணகுனமடையாததாலும், முதலிலிருந்தே நச்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு மாம்பழத்தை அறைகுறை மனத்துடன் கொடுத்தான். எனக்கும் அந்த சமயத்தில்தான் காய்ச்சல் வந்து சுமாராகியிருந்தது. பங்கனபள்ளி மாம்பழங்கள் எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை உங்களுக்கு சொல்லதேவையில்லை. எனக்கும் அந்த சமயம் பத்து பதினோரு வயது தானே. பழம் கிடைத்த மகிழ்சியிலும் அதன் ஆசையினாலும் உடற்பயிற்சி கட்டடத்தின் வராந்தாவின் சுற்றுசுவரில் ஒரு காலை, நிற்பதற்கு வசதியாக மேலே தூக்கிப்போட்டு நின்றுக் கொண்டு, அந்த பழம் முழுவதையும் நான் ஒருவனே தின்றுமுடித்து விட்டேன். பிறகு வந்ததே வினை, அப்பொழுது தான் காய்ச்சல் விட்டிருந்ததாலும் காலையிலேயே வெறும் வயிற்றில் சாப்பிட்டதாலும் அன்று மாலையே வயிற்றுப்போக்கும், காய்ச்சலும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அவன் நிலையோ மேலும் பரிதாபமானது. அனைத்து பழங்களும் கெட்டு குப்பையில் போட்ட பிறகும், உடல்நிலை சரியாகமல் அவன் தவித்த தவிப்புதான். அடுத்து யாரைப் பற்றி, எதைப் பற்றி சொல்லலாம்?.....

4 comments:

Nimal said...

உங்கள் பதிவுக்கு இன்று தான் வந்தேன்... வாசித்தி பதிவுகள் நன்றாக இருந்தன. ஏனயவற்றையும் இனித்தான் வாசிக்க வேண்டும்.

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்..!

Dhavappudhalvan said...

நன்றிகள் நிமல், தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

vetha (kovaikkavi) said...

nalla story......

Dhavappudhalvan said...

kavithai said...
///nalla story......///

இது கதையல்ல சகோதரி. நடந்த நிகழ்வுகள்.