Thursday, December 4, 2008

எனக்கும்!!!!!-21

இப்பொழுது சேலம்.அசோக், நான் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த பிறகு வந்து சேர்ந்தான். அப்பொழுது அவனுடன் வந்திருந்த அவன் அம்மாவும் அக்காவும் எங்களையெல்லாம் பெயரும் ஊரும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.என் பெயரையும் ஊரையும் அறிந்துக் கொண்டதுமே, கோவை தெலுங்குபாளைய மருத்துவமனை, என் பாட்டி,சகோதரி,அம்மா பெயர்களையெல்லாம் சொல்லி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபிறகு சொன்னார்கள், இந்த அசோக்கும் நான் அங்கிருந்தபோது ஆறு மாதம் மருத்துவம் செய்துக்கொண்டதாக. அவனுக்குத் துணையாக இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதுடன், அவனிடமும் நான் துணையிருப்பேன் என தைரியம் கொடுத்து சென்றார்கள். சிறிது அலட்டலிருந்தாலும் மிகவும் மென்மையாக பேசக்கூடியவன். இனிமையான நண்பன். மாலதியின் நட்பு கிடைத்தபிறகு, அவளை சந்திக்க முடியாத நேரங்களில் மட்டும் தான் எங்களுடனிருப்பான் என்ற சுழ்நிலை ஏற்பட்டது. இதைப் பற்றி நாங்கள் எவ்வளவு கேலி செய்தாலும் பொருட்படுத்தவே மாட்டான். மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆன பிறகு ஓரிரு முறை அவன் வீட்டிற்கே சென்று வந்தேன். ஓரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தின் சேலம் மாவட்டப் பொது செயளாலராக இருந்தபோது, சங்கத் தகவலுக்காக வட்டார அலுவலகத்துக்குச் சென்றேன், அப்பொழுது தற்செயலாக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அசோக்கைப்பார்த்து அடையாளம் கண்டுக் கொண்டு பேசினோம். பணி நிமித்தத்தினால் குறுகிய நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டோம். அதன் பிறகு இதுவரை சந்திக்கவோ பேசவோ வாய்ப்புக் கிடைக்கவிலை. மற்றவர்களைப் பற்றி அடுத்ததில்....

2 comments:

vettha.(kovaikavi) said...

உங்கள் கதையை வாசிக்கிறேன். எழுதுங்கள் இறை ஆசி கிட்டட்டும்.

Dhavappudhalvan said...

@ vettha. said...
///உங்கள் கதையை வாசிக்கிறேன். எழுதுங்கள் இறை ஆசி கிட்டட்டும்.///

ஆறுதலான உங்கள் சொற்களே இதமளிக்கிறது சகோதரி.